Saturday, January 1, 2011

ஊருக்குத்தான் உபதேசம்; இதுதான் பாஜக!

அரசுக்கு சொந்தமான இடங்களில், சாலையோரங்களில், மக்களுக்கு இடையூறாக பல்வேறு வழிபாட்டுத்தலங்கள் அதிலும் குறிப்பாக திடீர் கோயில்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் பெருகிய நேரத்தில், இவற்றை அகற்றவேண்டும் என்று 'ட்ராபிக்' ராமசாமி உள்ளிட்ட பலர் கோர்ட்டுகளில் பொதுநல வழக்கு தொடர்ந்ததையடுத்து, ஆக்கிரமிப்பு வழிபாட்டுத்தலங்கள் அகற்றப்பட வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது மக்களுக்கு நினைவிருக்கலாம்.




நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்தும் வகையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் இடிக்கப்படுகையில் சொற்பமான அளவு தர்காக்களும் இடிக்கப்பட்டன. சட்டத்திற்கு மதிப்பளித்து இவற்றை முஸ்லிம்கள் கண்டுகொள்ளவில்லை. ஆனால் நடைபாதை கோயில்கள் அகற்றப்படும் போதெல்லாம் அங்கே பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் குறுக்கே நின்று, கோயில்களை இடிக்கவிடமாட்டோம் என்று கூக்குரலிடுவதை மக்கள் அறிவார்கள்.



உண்மையில் இந்துத்துவாக்கள் இவ்வாறு செய்வதற்கு காரணம் கோயில்கள் மீது கொண்ட பக்தி என்று அறியாத மக்கள் நம்புகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல என்பதற்கு ஒரு செய்தி.

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலக வளாகத்திற்குள் உள்ள சிவன் - பார்வதி கோவிலை அப்புறப்படுத்த வேண்டும் என்று அக்கட்சித் தலைவர்கள் முடிவு செய்துள்ளது, பாஜகவின் தலைமை அலுவலக வளாகத்தில் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன், சிறிய அளவில் சிவன் - பார்வதி கோவில் கட்டப்பட்டது.



அந்த அலுவலகத்திற்கு அருகில் உள்ள குடியிருப்புவாசிகள், தம்மால் முடிந்த அளவுக்கு சிறிய தொகையை திரட்டி, அந்த சிறிய கோவிலை கட்டினர். பின்னர், கடந்த 18 ஆண்டுகளாக, அங்கு வழக்கமான வழிபாட்டு நிகழ்ச்சிகளும், திருவிழாக்களும் நடந்து வருகின்றன. இவற்றை அந்த பகுதியில் உள்ள பொதுமக்களே செய்து வருகின்றனர். இந்நிலையில், அலுவலக வளாகத்திற்குள் பொதுமக்கள் கோவிலில் வழிபாடு செய்ய வருவதை, பாஜகவினர் இடைஞ்சலாக கருதத் துவங்கியுள்ளனர். எனவே, அந்த கோவிலை அகற்றி, காம்பவுண்டுக்கு வெளியே கட்டிக்கொள்ளுமாறு அந்தப் பகுதி மக்களிடம் கூறியுள்ளனர். இதனால், அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.



மக்களுக்கு இடையூறாக நடைபாதையில் இருக்கும் இந்து கோவில் இடிக்கப்பட்டால் கூட, அதற்காக குய்யோ-முறையோ என்று கூப்பாடு போடும் பாஜக, தங்களுக்கு இடையூறாக இருக்கிறது என்ற காரணம் கூறி, தங்களது அலுவலக வளாகத்திற்குள் உள்ள இந்து கோவிலையே அவர்கள் இடிக்க வேண்டும் என்று கூறியிருப்பது, அவர்களின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவதாக உள்ளது. இவர்களின் இந்த பக்தி வேஷத்தை மக்கள் புரிந்து கொண்டால் சரி!

No comments:

Post a Comment