Thursday, October 22, 2015

இந்தியா மத சார்பற்ற நாடுதானா

நேர்படப்பேசு (இந்தியா- பாக். கிரிக்கெட் போட்டிக்கு சிவசேனா எதிர்ப்பு... ) 20-10-2015 புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நேற்று 20.october இரவு 9 மணிக்கு நேர்பட பேசு விவாத நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.இதில் சிவசேனாவின் நிர்வாகி ராதாகிருஷ்ணன், இந்துக்களுக்கு எதிராக யார் பேசினாலும் கரியை பூசுவோம்... இதே அரங்கத்தில் உள்ள உங்கள் மீதும் கரியை பூசுவோம்" என பத்திரிகையாளர் ஞாநியை நோக்கி எச்சரிக்கை விடுத்தார்.



       புதிய தலைமுறை தொலைக்காட்சியில் 21/10/2015 ,இன்று காலை 7 மணிக்கு ஒளிபரப்பான புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ஜ.க. வின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் ஒருங்கிணைப்பாளர் ஜென்ராம் சகிப்புத்தன்மையற்ற செயல்களால் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகிறதா? என்று,இந்துத்வா அமைப்புகளின் வன்முறை பற்றிக் கேள்வி எழுப்புகிறார். 

உடனே எஸ்.ஆர்.சேகர் ஜென்ராமை "ஒரு கீழ்த்தரமான மனிதன் கூட இப்படி கேள்வி கேட்கமாட்டான்" என்று மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசினார் .
இந்துத்வா அமைப்புகள் சகிப்புத்தன்மையற்ற செயல்களில்இப்படித்தான் ஈடுபடுவார்கள் என்பதை நேரடியாக காண முடியும்.



கருத்துரிமைக்கும் பேச்சு சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்களை ஊடகங்கள் புறக்கணிக்க வேண்டும் : பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொதுச்செயலாளர் அறிக்கை!
மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததற்கு பின் இந்தியா முழுவதும் கருத்துரிமையும் பேச்சு சுதந்திரமும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக எழுத்தாளர்கள் கொலை செய்யப்படுவதும் மனித உரிமை ஆர்வலர்கள் தாக்கப்படுவதும் அவர்கள் மீது கருப்பு மை வீசப்படுவதும் தொடர்ந்து நடந்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்நிலையில் அமைதி பூங்காவான தமிழகத்தில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுக்கக்கூடிய பா.ஜ.க மற்றும் சங்க பரிவார மதவாதிகள் எதிர்கருத்துக்கள் பேசுபவர்களை ஒருமையில் பேசுவதும் நேரலையிலேயே மிரட்டுவதும் சமீப காலமாக நடைபெற்று வருகிறது. மேலும் புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது வெடிகுண்டு வீசிய சம்பவமும் சமீபத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் தங்களுக்கு எதிராக கேள்வி எழுப்பினால் கேள்வி கேட்பவர்களை கீழ்த்தரமாக பேசுவதும் நடைபெற்று வருகிறது. இதை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிப்பதோடு இது போன்ற அநாகரிகமாக பேசுபவர்களை ஊடகங்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறது. மேலும் விவாதங்களில் பங்கெடுக்கும் சமூக ஆர்வலர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டு கொள்கிறது.

No comments:

Post a Comment