Monday, October 26, 2015

பா.ஜ.க மந்திரி வி.கே. சிங் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு .


ஹரியாணாவில் தலித் குழந்தைகள் எரித்து கொலை செய்ய‌ப்பட்ட சம்பவத்தை நாயுடன் ஒப்பிட்ட‌ மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் மீது கர்நாடக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹரியானாவில் இரு தலித் குழந்தைகளை ஆதிக்க சாதியினர் தீயிட்டு கொளுத்தினர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு மத்திய அமைச்சர் வி.கே. சிங் அளித்த பதிலில், “நாட்டில் யாரையாவது நாய் கடித்தால்கூட அதுக்கும் மத்திய அரசுதான் காரணமா?” என கூறியிருந்தார்.
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வி.கே.சிங் மீது நடவடிக்கை எடுக்குமாறு மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து நேற்று கர்நாடக மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலித் மக்களை அவதூறாக பேசிய‌ வி.கே. சிங் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு பெங்களூரு ஹை கிரவுண்ட் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதேபோல ஹூப்ளியில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர் நாகராஜ் கவுரி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தலித் மக்களை நாயுடன் ஒப்பிட்ட வி.கே. சிங்கை அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும். இல்லாவிடில் வி.கே. சிங்கை கண்டித்தும், பாஜக அரசைக் கண்டித்தும் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து வி.கே. சிங் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஹூப்ளி காவல் நிலையத்தில் நாகராஜ் கவுரி புகார் அளித்தார். இதன் அடிப்படையில் தலித் பழங்குடியினர் வன்முறை தடுப்பு சட்டம் 1989-ம் பிரிவின் கீழ் வி.கே. சிங் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு வி.கே.சிங்குக்கு சம்மன் அனுப்பவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்
- See more at: http://www.thoothuonline.com/archives/75057#sthash.AQNPjx0p.dpuf

No comments:

Post a Comment