Friday, December 13, 2013

ஜமாஅத்தே இஸ்லாமியின் மூத்தத் தலைவர் அப்துல் காதர் முல்லா தூக்கிலிட்டு படுகொலை!

டாக்கா: மூத்த ஜமாஅத்தே இஸ்லாமி தலைவரை வங்காளதேசத்தின் பாசிச ஷேக் ஹஸீனா அரசு தூக்கிலிட்டு படுகொலைச் செய்துள்ளது.சட்டத்துறை இணை அமைச்சர் கமருல் இஸ்லாம் இச்செய்தியை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.நேற்று இரவு 10 மணிக்கு முல்லா தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார்.


தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சற்று முன்பாக மனைவியையும், பிள்ளைகளையும் சந்தித்தார் முல்லா.அப்போது முற்றிலும் அமைதியாக காணப்பட்ட முல்லா, நாட்டில் இஸ்லாமிய இயக்கத்திற்காகதான் உயிர் தியாகி ஆவதில் அபிமானம் கொள்வதாக கடைசியாக தெரிவித்தார் என்று அவரது மகன் ஹஸன் ஜமீல் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.மரணத்தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிச் செய்த சில மணிநேரங்களில் முல்லாதூக்கிலிடப்பட்டுள்ளார்.
1971-ஆம் ஆண்டு சுதந்திரப்போரில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு ஆதரவாக செயல்பட்டார் என்று குற்றம் சாட்டி ஷேக் ஹஸீனா அரசுநியமித்த சர்ச்சைக்குரிய தீர்ப்பாயம் முல்லாவுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.இதனை எதிர்த்து அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவில்அப்பீல் டிவிசன் கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி தூக்குத்தண்டனைவிதித்தது.
இதற்கு எதிரான மறு ஆய்வு மனுவை தலைமை நீதிபதி முஸம்மில் ஹுஸைன்தலைவரான ஐந்து உறுப்பினர்களை கொண்ட அமர்வு தள்ளுபடிச் செய்தது.செவ்வாய்க்கிழமை முல்லாவின் மரணத்தண்டனையை நிறைவேற்ற ஷேக் ஹஸீனா அரசுதீர்மானித்தது.
ஆனால், அன்று இரவு அளித்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் உத்தரவு வெளியிடும் வரை தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.நேற்று காலை மீண்டும் மனுவை விசாரணைக்கு எடுத்தபோது தண்டனையை உறுதிச் செய்தது.65 வயதான அப்துல் காதர் முல்லா, டாக்கா மத்திய சிறைச்சாலையில் பலத்தபாதுகாப்புக்கு மத்தியில் சிறைவைக்கப்பட்டிருந்தார்.
2010-ஆம் ஆண்டு ஜூலை13-ஆம் தேதி முல்லா கைதுச் செய்யப்பட்டார்.சிவிலியன்களை கொலைச் செய்தபாகிஸ்தான் ராணுவத்திற்கு உதவியதாக உள்ளிட்ட 6 பிரிவுகள் முல்லா மீதுசுமத்தப்பட்டன.நான்கு ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர்களை இதுவரை தீர்ப்பாயம்தண்டித்துள்ளது.
இதில் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை உறுதிச்செய்யும் முதல்தீர்ப்பே முல்லாவுக்கு எதிரான தூக்குத்தண்டனையாகும்.முல்லா தன் மீதானஅனைத்து குற்றச்சாட்டுக்களையும் மறுத்து வந்தார்.முல்லாவின் தூக்குத்தண்டனையை நிறைவேற்றுவது ஜனவரி ஐந்தாம் தேதிநடை பெறவிருக்கும் தேர்தலை பாதிக்கும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கெர்ரி நேற்று முன் தினம் ஷேக் ஹஸீனாவை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு நினைவூட்டினார்.
துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகானும், முல்லாவின் தூக்குத்தண்டனையை நிறைவேற்றக்கூடாது என்று ஹஸீனா அரசை வலியுறுத்தினார்.தீர்ப்பாயத்தின்தீர்ப்புக்கு எதிராக ஐ.நா மற்றும் பல்வேறு மனித உரிமை அமைப்புகள்எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஹஸீனாவிற்கு அடிமை சேவை புரியும்உச்சநீதிமன்றம் முல்லாவின் தூக்குத்தண்டனையை உறுதிச் செய்திருந்தது.ஜமாஅத்தே இஸ்லாமி, பி.என்.பி கட்சி தலைவர்களை விசாரிப்பதற்காக ஹஸீனா அரசால் நியமிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய தீர்ப்பாயத்தால் வங்காளதேசம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.இந்தஎதிர்ப்பில் ஏராளமானோர்  கொல்லப்பட்டனர்.

No comments:

Post a Comment