Monday, December 16, 2013

முத்துப்பேட்டையில் வி. ஏ. ஓ. மீது ஊராட்சி தலைவர் தாக்குதல் பரபரப்பு

முத்துப்பேட்டை அடுத்த கோவிலூர் வி.ஏ.ஓ.வாக இருப்பவர் குணசேகரன். இவர், கடந்த சில தினங்களாக விவசாயிகள் பயிர் காப்பீடு தொகை கட்டுவதற்கு சான்று வழங்கும் பனியில் இரவு பகலாக ஈடுப்பட்டு வந்தார்.


இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை முத்துப்பேட்டை போஸ்ட் ஆபிஸ் சாலையில் உள்ள வி.ஏ.ஓ. சங்க கட்டிடத்தில் விவசாயிகளுக்கு குணசேகரன் சான்று வழங்கி கொண்டு இருந்தார். அப்போது கோவிலூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி மனைவி சுலோக்சனா தனது விவசாய நிலத்திற்கு சான்று வாங்க வி.ஏ.ஓ. குணசேகரனிடம் சர்வே நம்பர் கொடுத்து உள்ளார். அதற்கு வி.ஏ.ஓ. தவறான நம்பர் இது. சரியான சர்வே நம்பரை கொண்டு வரும் படி சுலோக்சனாவிடம் கூறினாராம்.
வீட்டுக்கு சென்ற சுல்லோக்சனா மறுபடியும் சர்வே நம்பரை மாத்தி கொண்டு வந்துள்ளதால் மீண்டும் வி.ஏ.ஓ. திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த கோவிலூர் ஊராட்சி மன்ற தலைவர் ரவி (இ.கம்யூனிஸ்ட்) வி.ஏ.ஓ குணசேகரனிடம் தகராறு செய்து கைகளப்பில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் சான்று வாங்க காத்திருந்தவ�ர். இதனால் வி.ஏ.ஓக்கள் மத்தில் அதிருப்தி ஏற்பட்டு காவல் நிலையம் முன்பு கூடி முற்றிகையிட்டு நடவடிக்கை எடுக்கும் படி கோரிக்கை வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் காவல் நிலையத்திற்கு முன்பு முத்துப்பேட்டை டி.எ.எஸ்.பி.கணபதி, திருத்துறைப்பூண்டி வட்டாச்சியர் ராஜாகோபால் ஆகியோர் வந்தனர். பின்னர் காவல் நிலையத்தில் சமாதான பேச்சு வார்த்தை டி.எஸ்.பி மற்றும் வட்டாச்சியர் முன்னிலையில் நடைப்பெற்றது.
இதில் வருவாய் ஆய்வாளர் ராமசந்திரன, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் முருகையன. இ.கம்யூனிஸ்ட் நகர செயலாளர் மார்க்ஸ் மற்றும் வி.ஏ.ஓக்கள், காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
பின்னர் வி.ஏ.ஓ மற்றும் ஊராட்சி தலைவர் இடையே சமாதானம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் தங்களது புகார்களை திரும்ப வாங்கி கொண்டனர். இதனால் முத்துப்பேட்டையில் மாலை முதல் இரவு வரை பெரும்  ஏற்பட்டது.

No comments:

Post a Comment