Thursday, December 12, 2013

ஹிந்து முன்னணி தீவிரவாதிகளை கண்டித்து த.மு.மு.க சார்பாக தஞ்சையில் நடந்த ஆர்பாட்டம்

தமுமுக சார்பாக கடந்த டிசம்பர் 6 ம் தேதி தஞ்சை மாவட்டம் மதுக்கூரிலிருந்து வாகனங்களில் தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முஸ்லிம்கள் சென்றபோது போஸ் என்கிற இந்து முண்ணனியை சேர்ந்தவனும் அவனது தம்பி வழக்கறிஞர் பிரபுவும் தங்களது வாகனத்தை ரோட்டின் நடுவே நிறுத்திக்கொண்டு எங்கள் ஊர் வழியாக முஸ்லிம்கள் செல்லக்கூடாது என மிரட்டியதோடு வாகனத்தின் மீது கற்களை வீசியும் தாக்கியுள்ளனர். 




இதனை கண்டித்து அன்றே சாலை மறியல் செய்த முஸ்லிம்களிடம் மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுப்பதாகவும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்வதாகவும் உறுதி அளித்ததின் பேரில் அமைதியாக முஸ்லிம்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் கண்துடைப்புக்காக சிலரை கைதுசெய்துவிட்டு முக்கிய குற்றவாளிகளான போஸ் மற்றும் அவனது தம்பி வழக்கறிஞர் பிரபு ஆகியோரை காவல்துறை தப்ப விட்டுள்ளது. போஸ் என்பவன் மீது ஏற்கனவே இரண்டு முறை குண்டாஸ் எனும் தேசிய பாதுகாப்புச்சட்டம் பாய்ந்துள்ளது. இதுவரை இவர்களை கைது செய்யாமல் காவல்துறை முஸ்லிம்களை ஏமாற்றிவந்த நிலையில் நேற்று 11-12-13 அன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குற்றவாளிகளான போஸ் மற்றும் அவனது தம்பி வழக்கறிஞர் பிரபு ஆகியோரை தேசிய பாதுகாப்புச்சட்டத்தில் கைது செய்ய கோரி தமுமுகவினர் பெருந்திரளாக கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இதில் மாநில பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது, மாநில செயலாளர் கோவை செய்யது, தலைமை கழக உறுப்பினர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மாநில மாணவரணி செயலாளர் மருத்துவர் முஹம்மது சர்வத்கான், கழக பேச்சாளர் திருச்சி ரபீக் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். இதில் நூற்றுக்கணக்கான தமுமுகவினர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment