Wednesday, December 4, 2013

வலுவடைகிறது புயல் சின்னம்: தமிழகத்தில் மழை நீடிக்கும்

வங்கக் கடலில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்தப் பகுதி வலுவடைந்து வருகிறது. இது புதன்கிழமைக்குள் (டிச.3) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புதன்கிழமை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, காஞ்சிபுரம் உள்பட மாநிலத்தின் பல இடங்களில் கனமழை பெய்யலாம் என்றும் வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கை மற்றும் தமிழகக் கடல் பகுதிக்கு இடையே அண்மையில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. இது வலுவடைந்து தற்போது தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது.
இது அடுத்த சில நாள்களுக்குள் புயலாக மாறவும் வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:
வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் புயல் சின்னம், வலுவடைந்து தாழ்வு மண்டலமாக மாறும்போதுதான், அது எந்தத் திசையை நோக்கி நகரும் என்பது தெரிய வரும்.
அதன் பிறகே தமிழகத்தின் மழை வாய்ப்பு குறித்து கணிக்க முடியும். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதற்கான சூழல்கள் சாதகமாக உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
வானிலை முன்னறிவிப்பு: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராமநாதபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மாநிலத்தின் பிற இடங்களிலும் மழை பெய்யக்கூடும்.
திங்கள்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்):
திருவாரூர் மாவட்டம் குடவாசல், சிதம்பரம் - 12, ராமேசுவரம், நன்னிலம், பாம்பன், பாபநாசம் - 100, சீர்காழி - 90, சென்னை - 80, கொள்ளிடம், மணிமுத்தாறு, அம்பாசமுத்திரம் - 70, தாராபுரம், தரங்கம்பாடி - 60.

No comments:

Post a Comment