Friday, December 13, 2013

முஸ்லீம்களின் ஆதரவை மெல்ல மெல்ல இழக்கும் காங்... அதிர்ச்சித் தகவல்

டெல்லி: ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில், காங்கிரஸுக்கு பாதகமாக நிறைய விஷயங்கள் நடந்திருப்பது தெரிய வருகிறது. பாரம்பரியமாக காங்கிரஸுக்குக் கிடைத்து வந்த வாக்குகள் தற்போது அவர்களை விட்டு விலகியிருப்பதை இது காட்டுகிறது. குறிப்பாக டெல்லியில் மட்டும் 70 சதவீத முஸ்லீம் வாக்காளர்களை காங்கிரஸ் கட்சி இழந்துள்ளதாம். 2008 தேர்தலுடன் ஒப்பிடுகையில், காங்கிரஸ் கட்சி டெல்லியில், 70 சதவீத முஸ்லீம்களை இழந்துள்ளது. இத்தனைக்கும் காங்கிரஸுக்குக் கிடைத்த எட்டு எம்.எல்.ஏக்களில் 5 பேர் முஸ்லீம்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.



முஸ்லீம் தலைவர்களே காரணம்

காங்கிரஸுக்கு எதிராக முஸ்லீம் தலைவர்கள் பலர் தீவிரமாக பிரசாரம் செய்ததே இதற்குக் காரணம் என்கிறார்கள்.

அமேதி, ரேபரேலியிலும் பாதிப்பு வருமோ... 

முஸ்லீம் வாக்காளர்களின் அதிருப்தியும், முஸ்லீம் தலைவர்களின் காங்கிரஸ் மீதான கோபமும், ரேபரேலி, அமேதி ஆகிய முக்கியத் தொகுதிகளில் வரும் லோக்சபா தேர்தலிலும் எதிரொலிக்கலாம் என்று காங்கிரஸ் தரப்பு அச்சத்தில் உள்ளதாம்.

முஸ்லீம் வாக்காளர்கள் கையில் 150 எம்.பி தொகுதிகள் நாடு முழுவதும் 150 லோக்சபா தொகுதிகளில் முஸ்லீம் வாக்காளர்கள் முடிவை நிர்ணயிக்கக் கூடிய நிலையில் உள்ளவையாகும். இங்கெல்லாம் காங்கிரஸுக்கு எதிராக முஸ்லீம் தலைவர்கள் பலர் பிரசாரத்தில் குதிக்கலாம் என்று காங்கிரஸ் தரப்பு அச்சப்படுகிறதாம்.
உ.பி.- பீகாரில் உ.பியில் 19 சதவீத முஸ்லீம் வாக்காளர்கள் உள்ளனர். பீகாரில் 17 சதவீதம் பேர் உள்ளனர். இவர்கள் காங்கிரஸுக்கு ஆதரவாக இல்லை என்று கூறப்படுகிறது.

காங்கிரஸுக்கு எதிராக கிளம்பிய முப்தி ராஜஸ்தானில் காங்கிரஸுக்கு எதிரான பிரசாரத்தை முப்தி அஜாஸ் அர்ஷத் குவாஸ்மி என்ற முஸ்லீம் தலைவர்தான் மேற்கொண்டார். அவர் இதுகுறித்துக் கூறுகையில், இன்னும் மோடியைக் காட்டி முஸ்லீம்கள் எங்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூற முடியாது.
மோடியைப் பார்த்து பயப்படவில்லை நாங்கள் மோடியைப் பார்த்து பயப்படவில்லை. எங்களை விட்டால் முஸ்லீம்கள் எங்கே போய் விட முடியும் என்று இந்த மதச்சார்பற்ற அரசுகள் என்று கூறிக் கொள்ளும் கட்சிகள் நினைத்துக் கொண்டுள்ளன. ஆனால் மோடியைக் காரணம் காட்டி இனியும் எங்களை பகடைக் காயாக பயன்படுத்த முடியாது. டெல்லியில் நடந்திருப்பது டிரெய்லர்தான். லோக்சபா தேர்தலிலும் நாங்கள் தீவிரமாக செயல்படப் போகிறோம் என்றார்.

ஏன் இந்த திடீர் மாற்றம்

 முஸ்லீம் தலைவர்கள் இப்படி திடீரென காங்கிரஸுக்கு எதிராக கிளம்பியிருப்பதற்கு இரண்டு காரணங்களைச் சொல்கிறார்கள். அது ஒரு பொய் வழக்கு சம்பந்தப்பட்டது.

கைது செய்யப்பட்ட முஸ்லீம் பத்திரிக்கையாளர் கடந்த 2012 மார்ச் மாதம் சையத் முகம்மது அகமத் கஸ்மி என்ற டெல்லியைச் சேர்ந்த பத்திரிக்கையாளரை டெல்லி சிறப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். இஸ்ரேல் தூதரக அதிகாரியின் காரில் குண்டு வைத்தது தொடர்பான வழக்கில், ஈரான் உளவுத்துறையினருக்கு இவர் உதவினார் என்பது குற்றச்சாட்டு.

5500 டாலருக்காக 5500 டாலர் பணத்தைப் பெற்றுக் கொண்டு இந்த வேலையைச் செய்ததாக கஸ்மி ஒப்புக் கொண்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் கோர்ட்டில் இதை திட்டவட்டமாக மறுத்தார் கஸ்மி. தன்னை ஒரு வெற்றுத்தாளில் போலீஸார் வற்புறுத்தி கையெழுத்து வாங்கியதாக அவர் கூறினார். தங்களுக்கு ஒத்துழைக்காவிட்டால் குடும்பத்துக்கு ஆபத்து வரும் என்று மிரட்டியதாகவும் கூறினார்.
காங்கிரஸ் நில ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடியதால் கடைசியில் போலீஸ் தரப்பில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள் எதிலுமே கஸ்மி கையெழுத்து இடம் பெறவில்லை. கஸ்மி மீதான போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு அவர், காங்கிரஸ் புள்ளிகள் சிலருடன் தொடர்புடைய வக்பு வாரிய அதிகாரிகள், செய்து வந்த நில ஆக்கிரமிப்புக்கு எதிராக முஸ்லீம் தலைவர்களுடன் இணைந்து போராடியதே என்று முஸ்லீம் தலைவர்கள் கூறுகிறார்கள். கஸ்மி பழி வாங்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

இதுதான் ஆரம்பம் 

இந்த விவகாரம்தான் காங்கிரஸுக்கு எதிராக முஸ்லீம் தலைவர்கள் ஒன்று திரள காரணம் என்று கூறப்படுகிறது. கஸ்மி கைது விவகாரத்தால் காங்கிரஸ் மீது முஸ்லீம்களின் அதிருப்தி திரும்பியது. தற்போது அது தேர்தலில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. இது தொடரும் என்று முஸ்லீம்கள் கூறுவதால் காங்கிரஸ் மேலும் கலக்கமடைந்துள்ளது.

No comments:

Post a Comment