Wednesday, December 15, 2010

அசாஞ்சேவுக்கு பிரிட்டிஷ் நீதிமன்றம் ஜாமீன்

லண்டன், டிச. 14: விக்கி லீக்ஸ் இணைய தள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு பிரிட்டிஷ் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கியது.


 அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் திரை மறைவு வேலைகளை இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர் ஸ்வீடனில் தங்கி இருந்தபோது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு தொடர்பாக லண்டன் போலீஸôர் சில தினங்களுக்கு முன் அவரை கைது செய்தனர்.

 இந்நிலையில் அவருக்கு சில நிபந்தனைகளின் அடிப்படையில் பிரிட்டிஷ் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து 48 மணி நேரத்துக்குள் அசாஞ்சே விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஸ்வீடன் வழக்கறிஞர்கள் இதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர்.


செய்தி:தினமணி 

No comments:

Post a Comment