Monday, December 14, 2015

போராட்டத்தின் இலக்கணம் ஹமாஸ்


போராட்டத்தின் இலக்கணம் ஹமாஸ்


ஃபலஸ்தீன போராட்ட இயக்கமான ஹமாஸ் தனது 28வது தொடக்க விழாவினை கொண்டாடியது. 1988ஆம் ஆண்டு டிசம்பர் 14 அன்று ஹமாஸ் இயக்கம் தொடங்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. முதலாம் இன்திஃபாதா எனப்படும் மக்கள் எழுச்சியின் பின்புலத்தில் அறிவிக்கப்பட்ட ஹமாஸ் இயக்கம் இன்றுவரை ஃபலஸ்தீன மக்களின் நம்பிக்கையாக திகழந்து வருகிறது. 1988ல் தொடங்கப்பட்டாலும் அதன் தலைவர்கள் அதற்கு முன்னரே ஃபலஸ்தீன மக்கள் மத்தியில் பணியாற்றி வந்தனர்.



இஸ்ரேலுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் ஹமாஸ் இயக்கம் போராட்ட களத்தில் மட்டுமல்லாமல் அரசியல் களத்திலும் சாதித்துள்ளது. 2006ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை ஹமாஸ் இயக்கம் பெற்றது. அதன் தலைவர்களுள் ஒருவரான இஸ்மாயில் ஹனியா பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் ஹமாஸின் வெற்றியை ஏற்க மறுத்த இஸ்ரேல் காஸா பிரதேசத்தின் மீது பொருளாதார தடைகளை விதித்தது.
ஹமாஸ் இயக்க தலைவர்களான ஷேக் அகமது யாசின், அப்துல் அஜீஸ் ரன்திஸி, ஸலாஹ் ஷிஹாதா உள்ளிட்டவர்களை இஸ்ரேல் குறிவைத்து படுகொலை செய்தது. இருந்தபோதும் ஹமாஸ் இயக்கம் தனது போராட்டத்தில் தளர்ச்சி அடையாமல் தொடர்ந்து போராடி வருகிறது.
நேற்றைய தினம் காஸா நகரில் நடைபெற்ற பிரமாண்டமான பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு ஹமாஸ் இயக்கத்திற்கான தங்களின் ஆதரவினை மீண்டும் ஒருமுறை பதிவு செய்தனர்.பேரணியில் உரையாற்றிய இஸ்மாயில் ஹனியா, ‘ஹமாஸ் இயக்கம் தொடர்ந்து பலம் பெற்று வருவதாகவும் ஜெரூஸலத்தையும் மஸ்ஜிதுல் அக்ஸாவையும் மீட்பதற்கான அதன் தொண்டர்கள் இரவும் பகலும் அயராது பாடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
ஹமாஸ் துவக்க தினத்தை முன்னிட்டு டிசம்பர் 9ஆம் தேதி முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

No comments:

Post a Comment