Thursday, December 3, 2015

முத்துப்பேட்டையின் தாழ்வான பகுதிகளை SDPI கட்சியினர் ஆய்வு செய்தனர்!

இன்று 03.12.2015 மதியம் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள்  முத்துப்பேட்டையின்  தாழ்வான பகுதிகளான கொய்யா தோப்பு மற்றும் தெற்கு தெரு, பட்டுக்கோட்டை  ரோடு, மஜிதியா தெரு குட்டியர் பள்ளி தெரு ஆகிய இடங்களை ஆய்வு செய்தனர்.











மேலும் முத்துப்பேட்டையில்  மழை நீடித்து வெள்ளம் வரும் சூழல் ஏற்பட்டால் அதனை முன்கூட்டியே எப்படி  சரி செய்வது மற்றும் வெள்ளம் ஏற்பட்டால் அதனை எப்படி கையாள்வது குறித்து அங்கு வசிக்கும் மக்களிடம் ஆலோசனை செய்யப்பட்டது.







இந்நிகழ்வில் கட்சியின் மாவட்ட பொது செயலாளர் நெய்னா முஹம்மது , முத்துப்பேட்டை நகர தலைவர் சேக் முஹைதீன் நகர செயலாளர் அப்துல் மாலிக் மற்றும் நகர கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்

முத்துபேட்டை நகரின் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான அவசர கால உதவிகளை செய்திட 24 மணி நேரமும் கட்சியினரை அணுகலாம் என்று மக்களிடம் தெரிவித்தனர் 

முத்துப்பேட்டை மழை கால அவசர உதவிக்கு

மாவட்ட பொது செயலாளர்: 9659337915நகர தலைவர்: 8122362484
நகர செயலாளர்: 7402204742, 9789160103 


No comments:

Post a Comment