Saturday, November 2, 2013

முஸஃபர் நகர் கலவரம்: 8 பேர் கைது, 15 பேர் மீது வழக்கு!

முஸஃபர் நகர்: உத்தரப் பிரதேசத்தின் முஸஃபர்நகரில் அண்மையில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


முஸஃபர்நகர் அருகே உள்ள புதானா பகுதியில் அண்மையில் ஏற்பட்ட கலவரத்தில் 3முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அங்கு கலவரம் மேலும் பரவாமல் தடுக்க ஏராளமான துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இக்கலவரம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். முஸஃபர்நகர் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட மாஜிஸ்திரேட் கெüசல்ராஜ் கூறும்போது, “”முஹம்மது புரைசிங் மற்றும் ஹுசைன்பூர் கிராமங்களில் இரு பிரிவினருக்கு இடையே நடந்த மோதலில் 3 பேர் கொல்லப்பட்டனர் ” என்றார். கலவரத்தில் கொல்லப்பட்ட 3 பேரின் இறுதிச் சடங்கு பலத்த பாதுகாப்புடன்வியாழக்கிழமை நடைபெற்றது. மேலும் ஒரு பெண் சாவு: இந்நிலையில் ஷாம்லி மாவட்டம் லிசார் கிராமத்தைச் சேர்ந்த ரீனா (22) என்பவர் தனது கணவர் ராஜேந்தருடன் (25) ஹசன்புர்கர்-லிசார் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் ரீனா உயிரிழந்தார். ராஜேந்தர் காயம் அடைந்தார்.

இதனிடையே லக்னோவில் வியாழக்கிழமை சமாஜவாதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆச்சார்ய நரேந்திர தேவ் பிறந்த நாள் விழாவில் பேசிய முலாயம் சிங், “”உத்தரப்பிரதேசத்தில் கலவரத்தை தூண்டிவிடும் மதவாத சக்திகளை ஒடுக்குவோம். சமூகத்தில் வேற்றுமையை உருவாக்கும் நோக்கத்தில் சில மதவாத சக்திகள் பிரச்னை எழுப்பி வருகின்றன” என்று கூறினார்.

No comments:

Post a Comment