Sunday, November 29, 2015

முத்துப்பேட்டை அருகே:த.மு.மு.க ஹைதர் அலி அவர்கள் சென்ற கார் பயங்கர விபத்து! (படங்கள் இணைப்பு)



த.மு.மு.க மற்றும் ம.ம.க கட்சியின் மூத்த தலைவர் ஹைதர் அலி அவர்களின் கார் ராமநாதபுரத்தில் இருந்து கூத்தானல்லூரில் ஒரு கூட்டத்திற்கு சென்று கொண்டிருந்தது.

 இந்நிலையில் அதிரை முத்துப்பேட்டை கடந்த சென்று கொண்டிருக்கும் போது கருங்குளம் அருகில் எதிரே வந்த இன்னோவா கார் மீது பயங்கரமாக மோதியது.


இதில் ஹைதர் அலி அவர்களின் கார் ஓட்டுனர் பயங்கர காயம் அடைந்து அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஹைதர் அலி அவர்கள் தம்பிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து தகவல் அறிந்த தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை அஹமது ஹாஜா அவர்கள் விபத்து நடந்த இடத்தையும் ஹைதர் அலி அவர்களை நேரில் சென்று பார்வையிட்டார்.
நன்றி -

அதிரை பிறை

No comments:

Post a Comment