Tuesday, November 5, 2013

சென்னை மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்: முதல்வர் தொடங்கி வைக்கிறார்

சென்னையில் கோயம்பேடு மெட்ரோ ரயில் பணிமனையில் இன்னும் 2 நாள்களில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெறும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கமணி ஞாயிற்றுக்கிழமை மாலை கோயம்பேடு பணிமனையில் மெட்ரோ ரயில் அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயிலின் மின் இணைப்பு உள்ளிட்டவை சோதனை செய்யப்பட்டது. ரயில் முன்பும் பின்பும் இயக்கப்பட்டது. ரயிலின் அனைத்து அம்சங்களும் வெற்றிகரமாக இயங்கியதால் அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் திருப்தி ஏற்பட்டது.

எனவே இது குறித்து முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தச் சோதனை ஓட்டம் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

செயற்கைகோள் உதவி: கோயம்பேடு பணிமனையில் நடைபெறவுள்ள இந்த சோதனை ஓட்டத்தை செயற்கைகோள் உதவியுடன் ஜிபிஎஸ் கூடிய சாதனங்கள் மூலம்  கண்காணித்து தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டால் மெட்ரோ ரயிலை உடனடியாக நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சோதனை ஓட்டம் தொடங்கும் முன்பு கோயம்பேடு பணிமனையை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று மெட்ரோ ரயில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment