Monday, July 11, 2011

ரியல் எஸ்டேட் பண்றவங்களுக்கு வருது ஆப்பு!

புதுடில்லி:  ரியல் எஸ்டேட் தொழிலில், பொதுமக்கள் ஏமாற்றப் படுவதை தடுக்கும் வகையிலான மசோதா, பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது. நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சியில், ரியல் எஸ்டேட் துறையின் பங்கு, 9 சதவீதம். இருந்தும் இத்துறை முறைப்படுத்தப்படாமல் உள்ளது. 



ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருவோர் மீது, பொதுமக்கள் புகார் கூறுவது அதிகரித்து வருகிறது. எனவே, ரியல் எஸ்டேட் துறையை முறைப்படுத்தவும்,  ஏமாற்றப்படுவதில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கவும் வகை செய்யும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு மசோதா, தயாராகியுள்ளது. இந்த மசோதாவவை, பார்லி மென்டில், வரும் மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

இதில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், சம்பந்தப்பட்ட நிலம் தொடர்பான விவரங்களை பகிரங்கமாக தெரிவிக்க வேண்டி யிருக்கும். மேலும், பணிகள் முடியும் நாள் பற்றிய விவரத்தையும் முன் கூட்டியே தெரிவிக்க வேண்டியிருக்கும். தற்போது இந்த மசோதா, சட்ட அமைச்சகத்தின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பின், மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற்று, பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment