Friday, July 1, 2011

சிறுபான்மையினருக்கு கல்வி மறுக்கப்பட்டால் 3 ஆண்டு ஜெயில்; முஸ்லிம்களை ஏமாற்ற மத்திய அரசின் புதிய மசோதா..?


சிறுபான்மையினருக்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, வீட்டு வசதி மறுக்கப்பட கூடாது என்று சச்சார் கமிட்டியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த கமிட்டியின் அறிக்கையை நடைமுறை படுத்த வகை செய்யும் வரைவு மசோதா ஒன்றை, மத்திய அரசு தயாரித்து வருகிறது. இந்த மசோதாவின் படி, சிறுபான்மையினருக்கு கல்வி, வேலைவாய்ப்பு, வீட்டு வசதியை மறுப்போருக்கு 3 ஆண்டு வரை ஜெயில் தண்டனை அளிக்க முடியும். மேலும் தவறு செய்வோருக்கு ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்க முடியும். இதற்கான நடவடிக்கைகளை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை எடுத்து வருகிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

சச்சார் கமிட்டியின் அறிக்கை மத்திய அரசிடம் கையளிக்கப்பட்டு  ஆண்டுகள் பல கடந்த பின்னும், அந்த அறிக்கையில் அவர் வலியுறுத்திய முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீடு குறித்து சிறு துரும்பையும் அசைக்காத மத்திய அரசு, சிறுபான்மை மக்களை ஏமாற்றும் வகையில் மேற்கண்ட மசோதாக்களை தாக்கல் செய்வதால் முஸ்லிம்களுக்கு எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. முஸ்லிம்களின் தனி பிரதித்துவ இடஒதுகீட்டை மத்திய அரசு வழங்குவதே ஒரே தீர்வாகும். அதை செய்யாமல் கண்கட்டி வித்தைகளை காட்டி முஸ்லிம்களை ஏமாற்ற ஆளும் காங்கிரசும், ஆதரவளிக்கும் கட்சிகளும் நினைத்தால், தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஏற்பட்ட நிலையை  மத்தியிலும் ஏற்படுத்த முஸ்லிம்கள் தயங்கமாட்டார்கள் என்பதை மத்திய அரசு உடனடியாக உணர்ந்து கொள்ளுதல் பயனளிக்கும்.  


No comments:

Post a Comment