துடெல்லி: ஒடுக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயத்திற்கு தலைமையேற்க முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் களமிறங்கவேண்டும்; சமூக உணர்வை மீட்டெடுக்கவேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம். ஷெரீஃப் கூறியுள்ளார்.
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தேசிய குழுவின் கூட்டத்தை புதுடெல்லியில் துவக்கி வைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம். ஷெரீஃப் உரை நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில் கூறியது: சமுதாயத்தின் பொருளாதார, தார்மீக நிலைப்பாடுகளைக் குறித்து முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் அறிந்து கொள்ளவேண்டும். முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் ஒரு குறுகிய வட்டத்தில் செயல்படக்கூடியவர்கள் அல்லர். அவர்கள் சாதாரண மக்களுடன் இருக்க வேண்டும். அவ்வாறெனில் சாதாரண மக்களின் முன்னேற்றத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசிக்க வேண்டும்.
மார்க்க அறிஞர்கள் நபிமார்களின் வாரிசுகளாவர். அவர்கள் சமூகத்திற்கு அறிவையும், சீர்திருத்தத்தையும் அளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். தேசம் மற்றும் முஸ்லிம்களின் எதிரிகளை அடையாளம் கண்டுகொள்ளவேண்டும். சமூகத்தின் ஒற்றுமை, முன்னேற்றம், சீர்திருத்தம் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு கருத்துவேறுபாடுகள் இல்லாமல் மார்க்க அறிஞர்கள் வழி நடத்தவேண்டும். அப்பொழுதுதான் உன்னத சமுதாயத்தை உருவாக்க முடியும்.
இவ்வாறு கே.எம். ஷெரீஃப் உரையாற்றினார். நேற்று காலை 10.30 மணிக்கு தேசிய பொருளாளர் மவ்லானா ஈஸா ஃபாழில் மன்பஈயின் துஆவுடன் துவங்கிய கூட்டத்தில் தேசிய தலைவர் மவ்லானா உஸ்மான் பேக் ரஷாதி துவக்க உரை நிகழ்த்தினார்.
தேசிய செயலாளர் ஷாஹித் (மஹராஷ்ட்ரா) அறிக்கை வாசித்தார். மவ்லானா ஜலாலுத்தீன் ரமதானி (மணிப்பூர்), மவ்லானா அப்துல் தவாப் (மேற்கு வங்காளம்), மவ்லானா முஹம்மது வாரிஸ் கான் காஸிமி (டெல்லி), ஆபிருத்தீன் மன்பஈ (தமிழ்நாடு), முஃப்தி ஃபாரூக் (அஸ்ஸாம்), டி. அப்துல் ரஹ்மான் பாகவி (கேரளா), காழி ஹிஃப்ஸுர் ரஹ்மான் (மத்திய பிரதேசம்), அப்துல் ரஷீத் ரஷாதி (ஆந்திரா), முஃப்தி ஹனீஃப் அஹ்ராரி (கோவா), மஹ்பூப் ஆலம் (பீகார்) ஆகியோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment