Wednesday, October 2, 2013

பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்கு: சர்ச்சைக்குரிய கூட்டத்தில் பங்கேற்றதாக பிரகாஷ் ஜாவேத்கர் ஒப்புதல்!

புதுடெல்லி: துளசிராம் பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்கை சீர்குலைக்க நடந்த ரகசிய கூட்டத்தில் பங்கேற்றதை பா.ஜ.க.வின் தலைவர்களில் ஒருவரான பிரகாஷ் ஜாவேத்கர் ஒப்புக்கொண்டுள்ளார்.


இதனை சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. சி.பி.ஐ. விசாரணைக்கு ஜாவேத்கர் முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு சுதந்திர பத்திரிகையாளர் ஒருவர் ரகசிய கேமரா மூலம் ரகசிய கூட்டத்தின் தகவல்களை வெளிக்கொணர்ந்தார்.
பா.ஜ.க.வின் எம்.பி. பூபேந்திர யாதவிடமும் சி.பி.ஐ. விசாரணை நடத்தியுள்ளது. வழக்கை சீர்குலைக்க முயற்சி என்ற குற்றச்சாட்டை இவர்கள் மறுத்துள்ளனர். பிரஜாபதியின் தாயார் நிர்மலா பாயியின் வாக்குமூலத்தை எவ்வாறு திரிக்கலாம் என்பது குறித்து ரகசிய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
நிர்மலா பாயியின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. பா.ஜ.க. பொதுச் செயலாளர் அமித் ஷா இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment