Saturday, February 4, 2012

கால்பந்து கலவரம்:எகிப்தில் கடுமையான எதிர்ப்பு


கெய்ரோ:74 பேரின் மரணத்திற்கு காரணமான கால்பந்து கலவரத்தை தடுத்து நிறுத்துவதில் பாதுகாப்பு படையினர் தோல்வியை தழுவியதாக குற்றம் சாட்டி எகிப்தில் தொடரும் போராட்டத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.



எதிர்ப்பாளர்கள் மீது நடந்த துப்பாக்கிச்சூட்டில் சூயஸ் நகரத்தில் ஒருவரும், மற்றொருவர் கெய்ரோவில் ராணுவ விமானம் மோதியும் இறந்தனர். 2 பேர் கொல்லப்பட்ட செய்தியை கேள்வி பட்டு சூயஸிலும், கெய்ரோவிலும் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். எதிர்ப்பாளர்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதலில் 668 பேருக்கு காயம் ஏற்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்களை  மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனிடையே, இரண்டு அமெரிக்க சுற்றுலா பயணிகளை துப்பாக்கி ஏந்திய நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர். இவர்கள் பயணித்த வாகனத்தை தடுத்து நிறுத்தி கடத்திச் சென்றதாக அல்ஜஸீரா கூறுகிறது.
கடந்த புதன்கிழமை எகிப்து நகரமான போர்ட் ஸைய்தில் பிரபல க்ளப்புகளான அல்மஸ்ரி மற்றும் அல் அஹ்லிக்கு இடையே நடந்த கால்பந்து போட்டிக்கு பிறகு ஸ்டேடியத்தில் அல்மஸ்ரி க்ளப்பின் ரசிகர்கள் வன்முறையில் இறங்கினர். இதனைத் தொடர்ந்து 74 பேர் கொல்லப்பட்டனர்.

No comments:

Post a Comment