Friday, February 3, 2012

9/11 அச்சம் – பணியை இழந்த முஸ்லிம் விமானி


லண்டன்:பிரிட்டனின் முக்கிய விமான நிறுவனத்தில் பணிபுரிந்த முஸ்லிம் விமானி ஒருவர் செப்டம்பர் 9/11 போன்ற தாக்குதலை நடத்தக்கூடும் என்று குற்றம் சாட்டப்பட்டு பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக இவருக்கு ஹிஸ்புத் தஹ்ரீர் என்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகக் கூறி கைது செய்யப்பட்டு இருந்தார். ஆனால் இதுவரை எந்த குற்றசாட்டும் பதிவு செய்யப்பட வில்லை. எனினும் விமானத்தை இந்த விமானி தவறுதலாக பயன்படுத்தக்கூடும் என்று தாங்கள் அஞ்சுவதாகவும் எனவே பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த விமானியை பணிநீக்கம் செய்யவேண்டும் என்றும் அந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளதாக டெய்லி மெயில் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் சம்பந்தப்பட்ட விமானியிடம் தங்களுடைய மேலதிகாரிகள் செப்டம்பர்(9/11) சம்பவத்தைப் போன்று தாங்கள் ஏதாவது செய்துவிட்டால் என்ன செய்வது என்று அஞ்சுவதால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று இது தொடர்பான வழக்கு நடந்த நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் இது குறித்து தொடர்புடைய விமானி தெரிவித்துள்ளதாவது; ‘நான் விமானத்தைக் கட்டிடங்களுக்குள் செலுத்திவிடுவேன் என்று அவர்கள் நம்புவதாகவும். மேலும் தனது இனம் மற்றும் மதத்தின் அடிப்படையிலேயே இந்த பணி நீக்கம் நடந்துள்ளதாக தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தன்னால் நிறுவனத்திற்கு கெட்டப்பெயர் வந்துவிடும் என்று தான் அஞ்சுவதாக நீதிமன்றத்தில் தனது மேலாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும்’ கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment