Sunday, February 5, 2012

உ.பி:இரண்டாவது கட்ட தேர்தலில் 118 கிரிமினல் வேட்பாளர்கள்


லக்னோ:உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெறவிருக்கும் இரண்டாவது கட்ட சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 118 பேர் கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்களாவர்.
மாநில தேர்தல் கண்காணிப்பு அமைப்பான உத்தரபிரதேஷ் எலக்‌ஷன் வாட்ச் (யு.பி.இ.டபிள்யூ) வேட்பாளர்களின் குற்ற பின்னணி குறித்து கண்டறிந்துள்ளது.
பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இரண்டாவது கட்ட தேர்தலில் போட்டியிடும் 337 வேட்பாளர்களில் 35 சதவீதம் பேர் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி, கடத்தல் உள்பட ஏதேனும் ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்கள் என்பதை யு.பி.இ.டபிள்யூ கண்டுபிடித்துள்ளது.


கவ்மி ஏகதா தள் கட்சியின் சார்பாக மஉ, கோஸி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடும் முக்தார் அன்ஸாரியின் மீது 15 குற்றவியல் வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. ஃபிபனா தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் உபேந்திரா மீது 11 வழக்குகளும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக கிருஷிநகரில் போட்டியிடும் ஜாவேத் இக்பால் மீது ஐந்து வழக்குகளும் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
க்ரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்களை வேட்பாளர்களாக தேர்தல் களத்தில் இறக்கியதில் முதலிடம் வகிப்பது சமாஜ்வாதி கட்சி ஆகும். இரண்டவாது இடம் சி.எஸ்.பி ஆகும். எஸ்.பி-30, சி.எஸ்.பி-23, பா.ஜ.க-20, காங்கிரஸ்-19, பீஸ்பார்டி- 8, ஐக்கிய ஜனதா தளம்-12 ஆகிய எண்ணிக்கையில் பல்வேறு கட்சிகள் குற்றம் சாட்டப்பட்டவர்களை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளன.
மீண்டும் போட்டியிடும் எம்.எல்.ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு 2.74 கோடி ரூபாய் ஆகும். பொருளாதார வளர்ச்சி சதவீதம் 187 சதவீதம் ஆகும். வேட்பாளர்களில் அதிக சொத்துக்களை வைத்திருப்பவர் பி.எஸ்.பியின் ஷா ஆலம் ஆவார். 54.44 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வைத்திருக்கும் இவர் முபாரக்பூரில் போட்டியிடுகிறார். ஸாஹிபூரில் போட்டியிடும் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் சுபாஷ் 35.32 கோடி மதிப்பிலான சொத்துக்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். மொத்தம் 337 வேட்பாளர்களில் 166 பேர் (49 சதவீதம்) இதுவரை வருமானவரி ரிட்டேர்ன் சமர்ப்பிக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment