Sunday, November 29, 2015

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி SDPI கட்சி மாநிலம் தழுவிய பிரச்சார பயணம்

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், நீர்நிலைகளை காக்க வேண்டும், இஸ்லாமியர்களுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நவ.28 முதல் டிசம்பர் 13 வரை  குமரி முதல் சென்னை வரையிலான எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவரின் மக்களை சந்திப்போம் பிரச்சார பயணம் குமரி மாவட்டம் கன்னியாகுமரி களியக்காவிளையில் இருந்து தொடங்கியது.




பூரண மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும், தமிழகத்தின் நீர் ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும், தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் என மாநில அரசை வலியுறுத்தியும், தமிழக மீனவர்களின்  வாழ்வாதாரப் பிரச்சனையாக உள்ள கட்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்க வேண்டும்; விவசாயிகள், தொழிலாளர்களை பாதிக்கும் வகையிலான மக்கள் விரோத சட்டங்களையும், சிறுபான்மை மற்றும் தலித் மக்களுக்கு எதிரான போக்கையும் கைவிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும் ஆகிய இந்த ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பிரச்சார பயணம் நடைபெறுகிறது.

இப்பிரச்சார பயணத்தை எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் சாம் குட்டி ஜேக்கப் வாழ்த்துரை வழங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் முகைதீன் அப்துல் காதர் வாழ்த்துரை வழங்கினார். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி, பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் ஆகியோர் பிரச்சார பயணத்தின் நோக்கம் குறித்து உரையாற்றினர்.


முன்னதாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அபுபக்கர் சித்திக் வரவேற்புரையாற்றினார். மாநில செயலாளர் அமீர் ஹம்சா நன்றியுறையாற்றினார். இந்நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் நெல்லை முபாரக், அம்ஜத் பாஷா, மாநில செயலாளர்கள் ரத்தினம், உஸ்மான்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

2 comments:

  1. Best casino games to play in 2021 - DrmCD
    1. Starburst. 성남 출장안마 2. Mega Fortune · 3. The Story of Thor. 4. The Legend of 상주 출장마사지 Thor. 용인 출장마사지 5. Starburst. 6. 광양 출장안마 The Story of Thor. 7. The Legend of Thor. 8. The Legend of Thor. 화성 출장안마 9.

    ReplyDelete