Friday, November 6, 2015

முத்துப்பேட்டை:பொதுமக்கள் கடும் அதிருப்தி

முத்துப்பேட்டையில் இன்று பேரூரட்சி சார்பாக டெங்கு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது


 இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர் ,
முத்துப்பேட்டை பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஆண்டை போல டெங்கு, சிக்கன் குனியா, மலேரியா போன்ற நோய் பரப்பும் கொசுகள் அதிகளவில் பரவத் தொடங்கி உள்ளது. வடக்கிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே கொசு ஒழிக்கும் பணியில் பேரூராட்சி நிர்வாகம் முறையாக செயல்படவில்லை. இதனால் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குளாகி வருகின்றனர். சாலைகள் மற்றும் தெருக்களில் குப்பைகள் குவிந்துள்ளன. 


சாலையோரம் அள்ளப்படாமல் கிடக்கும் குப்பைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மழை நீர் செல்வதற்கு வசதி இல்லாததால் சாலைகளில் தேங்கி பொதுமக்கள் நடப்பதற்கு மிகவும் சிரமம் படுகின்றனர்

. இதனால் கொசுக்கள் உற்பத்தியும் பெருகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் பேரூரட்சி நிர்வாகம் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடத்தியது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.

No comments:

Post a Comment