முத்துப்பேட்டை நவ 07: தமுமுக & மமக ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் மமக ஒன்றிய செயலாளர் நெய்னா முகம்மது அவர்கள் தலைமையிலும்,
மமக மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் தீன் முகம்மது,மமக மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் முகம்மது பைசல்,தமுமுக நகர செயலாளர் சம்சுதீன்,மமக செயலாளர் ஹாமீம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது
வருகின்ற டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பை கண்டித்து திருவாரூரில் கருப்பு சட்டை அணிந்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம் சம்மந்தமாக ஆலோசனை நடைபெற்றது.
இதில் முத்துப்பேட்டை இருந்து டிசம்பர் 6 போரட்டத்திற்கு அதிக மக்களை திரட்டுவது,நகர முழுவதும் சுவர் விளம்பரம் செய்வது, முத்துப்பேட்டை நகரத்தில் கொடி ஏற்றுவது மற்றும் தெருமுனை கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

No comments:
Post a Comment