Thursday, November 5, 2015

பிரபல இயக்குனர் குந்தன் ஷா தனக்கு வழங்கப்பட்ட தேசிய விருதை திரும்ப ஒப்படைத்தார்!.


நாட்டில் மத சகிப்புத்தன்மை குறைந்து வருவதையும், பட்டி மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு
 தெரிவித்தும் பிரபல முதுபெரும் திரைப்பட இயக்குனர் குந்தன் ஷா தன்னுடைய “ஜானோ பீதோ யாரோ” என்ற திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட தேசிய விருதை திருப்பியளித்துள்ளார்.

இதற்கு முன்பு இயக்குனர் திபாகர் பேனர்ஜி தலைமையில் 11 படைப்பாளிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட தேசிய விருதை இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பியளித்திருந்தனர்.
அவர்களில், ஆனந்த பட்டவர்த்தன், பர்ஸ் கம்தார், நிஷ்தா ஜெயின், கீர்த்தி நகவா, ஹர்ஷவர்தன் குல்கர்னி, ஹரி நாயர், ராகேஷ் ஷர்மா, இந்திரநீல் லாஹிரி, லிபிகா சிங் தராய், விக்ராந்த் பவார், ராகேஷ் ஷுக்லா, பிரதீக் வாத்ஸ் போன்ற பிரபலமான படைப்பாளிகளும் அடங்குவர்.
மேலும் சில நாட்களுக்கு முன்பி பிரபல ஹாலிவுட் நடிகர் ஷாருக்கானும் தனக்கு வழங்கப்பட்ட தேசிய விருதை திருப்பியளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார், மேலும் இந்த சகிப்புத்தன்மைக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடும் படைப்பாளிகளுக்கு தனது ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பாரதிய ஜனதா எம்.பி-கள் இந்தியாவை விட்டு ஷாருக்கான் பாகிஸ்தானுக்கு சென்றுவிட வேண்டும் என்று மிரட்டல் விடுத்தனர்.

No comments:

Post a Comment