Wednesday, December 8, 2010

நீளும் 'ரத்தக்கறை'; அமீத்ஷா மீது மேலும் ஒரு கொலை வழக்கு

குஜராத்தின் முதல்வரும் நரவேட்டையில் புகழ் பெற்றவருமான நரேந்திர மோடியின் சகாவும், முன்னாள் அமைச்சருமான அமீத்ஷா, சொராப்தீன் போலி என்கவுண்டர் வழக்கில் தொடர்புடையவராக குற்றம் சாட்டப்பட்டு, சிறை சென்று பின்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவர் குஜராத்திற்கு வெளியே தங்கியிருக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. சொராப்தீன் போலி என்கவுண்டர் பிரச்சினையால் பதவியும் பறிபோய் நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறியிறங்கிக் கொண்டிருக்கும்  அமீத்ஷாவுக்கு மேலும் ஒரு சோதனை!

சொராப்தீன் போலி என்கவுண்டர் வழக்கில் முக்கிய சாட்சியான துளசிராம் பிரஜாபதி என்பவர் போலீசாரால்  2006 ஆம் ஆண்டு என்கவுடன்டரில்  கொல்லப்பட்டார். சொராப்தீன் வழக்கின் முக்கிய சாட்சி இவர் என்பதால்தான் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த கொலை நடைபெறும் போது அமைச்சராக இருந்த அமீத்ஷா, இக்கொலைக்கு முந்தைய மற்றும் பிந்தைய சில  நாட்களில் போலீஸ் அதிகாரி ராஜ்குமார் பாண்டியனுடன் [இவர் சொராப்தீன் என்கவுண்டர் வழக்கில் கைதாகி இப்போது சிறையில் இருக்கிறார்]  13  முறை தொலைபேசியில்  பேசியுள்ளார் என்றும், இதன் மூலம் துளசிராம் போலி என்கவுன்டரிலும் அமீத்ஷாவுக்கு தொடர்பு இருக்கிறது என்பது உறுதியாகிறது என்றும், துளசிராம் போலி என்கவுண்டர்  வழக்கையும் சி.பி.ஐ. க்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்றும், இவ்வழக்கு தொடர்பாக அமீத்ஷாவை சி.பி.ஐ விசாரணைக்கு அனுமதிக்கவேண்டும் என்றும் சி.பி.ஐ. உச்சநீதிமன்றத்தில்  தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளது.

சி.பி.ஐ.யின் ஆரம்பம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு; 'பினிசிங்' தான் சரியில்ல. என்ற மக்களின் கமெண்டுக்கு இடம்தராமல், அமீத்ஷாவின் போலி என்கவுண்டர்களை  வெளிச்சத்திற்கு கொண்டு வந்து உரிய தண்டனை பெற்றுத் தருவதில் இறுதிவரை சி.பி. ஐ. உறுதியாக இருக்கும் என நம்புகிறோம். 

-- 

No comments:

Post a Comment