Saturday, December 11, 2010

காங்கிரûஸ தொடர்ந்து எதிர்ப்பேன்: இயக்குநர் சீமான் பேச்சு;

வேலூர், டிச. 10: காங்கிரஸ் கட்சியை நான் தொடர்ந்து எதிர்ப்பேன். அதுதான்
எங்கள் கொள்கை என்று வேலூர் மத்திய சிறையில் இருந்து வெள்ளிக்கிழமை  விடுதலையான திரைப்பட இயக்குநர் சீமான் கூறினார்.
   வேலூர் மத்திய சிறையில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருந்த சீமான் வெள்ளிக்கிழமை பிற்பகல் விடுதலை செய்யப்பட்டார். அப்போது அவர் சிறைக்கு வெளியில் திரண்டிருந்த நாம் தமிழர் கட்சி தொண்டர்களிடம் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.


   அதைத் தொடர்ந்து அவர் பேசியது:

   5 மாதங்கள் நான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால் எனது தொழில் மற்றும் அரசியல் கட்சிக்கு
இழப்பு ஏற்பட்டது. அடக்குமுறை ஒழியும் வரை ஓயமாட்டேன், தொடர்ந்து பேசுவேன். தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன்.

   1.76 லட்சம் கோடி ஊழல் புரிந்த ஆ. ராசாவுக்கு பரிந்து பேசுகிற கருணாநிதி ஜனநாயகத்தைப் பற்றி பேச அருகதையற்றவர். 2 முறை தவறாக என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர். தவறு என்று தெரிந்தும் என்னை சிறையில் அடைத்த தமிழக அரசு மீது வழக்கு  தொடருவேன். சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி சர்வாதிகார போக்கில் அரசு நடந்து கொள்கிறது.    காமராஜர் ஆட்சியை காங்கிரஸ் கட்சியால் அமைக்க முடியாது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஞானசேகரன், ஹசன் அலி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட் இழப்பார்கள்.


   காங்கிரஸ் நான் தொடர்ந்து எதிர்ப்பேன். நான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் எங்கு சென்றாலும் எதிர்ப்பேன். அதுதான் எங்களது கொள்கை.   கருணாநிதியும், மகன்கள் ஸ்டாலின், அழகிரி, மகள் கனிமொழி ஆகியோர் நாட்டு மக்களுக்கு உழைத்தது போதும். அவர்கள் ஓய்வு பெறட்டும். ஊழலற்ற உண்மையான ஜனநாயகம் விரைவில் மலரும் என்றார் அவர்.  கொளத்தூர் மணி, திரைப்பட இயக்குநர் பாலா, மதிமுக மாநில அமைப்பு செயலாளர் சுப்பிரமணியன், வேலூர் நகரச் செயலாளர் பழனி, நாம் தமிழர் கட்சி வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

No comments:

Post a Comment