Monday, December 13, 2010

பெண் தீவிரவாதி பிரக்யாவை சிறையில் சந்தித்தது ஏன்?

புது தில்லி, டிச. 12: மலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட  பெண் தீவிரவாதி பிரக்யாவை பாஜக மூத்த தலைவர்கள் அத்வானியும், ராஜ்நாத் சிங்கும் சிறையில் சந்தித்துப் பேசியது ஏன் என்று காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

தில்லியில் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது:


 பெண் தீவிரவாதி பிரக்யா சிறையில் அடைக்கப்பட்டவுடன் அது தொடர்பாக பேச பிரதமர் மன்மோகன் சிங்கை பாஜக தலைவர்கள் சந்தித்தது ஏன்?

மும்பை தாக்குதல் சம்பவத்தில் இந்து பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பிருப்பதாக நான் கூறவில்லை. போலீஸ் அதிகாரி கர்கரே, இந்து தீவிரவாதிகளால் மிரட்டப்பட்டார் என்று மட்டுமே கூறினேன். அது நூறு சதவீத உண்மை. இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சி தொடர்புடையது அல்ல என்று அவர் கூறினார்.


பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹூசைன் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மும்பை தாக்குதலில் உயிரிழந்த போலீஸ் அதிகாரி கர்கரேவின் தியாகத்தை திக்விஜய் சிங் கொச்சைப் படுத்தி வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட வேண்டும். அவராக கட்சியில் இருந்து விலக மாட்டார். காங்கிரஸ் தலைமை அவரை வெளியேற்ற வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment