Tuesday, December 14, 2010

மீரா சங்கரைத் தொடர்ந்து மேலும் ஒரு இந்தியத் தூதருக்கு அமெரிக்காவில் அவமரியாதை

டெக்ஸாஸ்: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் மீரா சங்கரை உடல் முழுவதும் சோதனை நடத்திய அவமானப்படுத்தியதைத் தொடர்ந்து தற்போது மேலும் ஒரு இந்தியத் தூதரை டர்பனை கழற்றுமாறு கூறி அவமானப்படுத்தியுள்ளது அமெரிக்கா.

தற்போது அமெரிக்க அதிகாரிகளால் அவமரியாதைக்கு உள்ளாகியுள்ள தூதர் ஹர்தீப் பூரி. சீக்கியரான இவர் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாக உள்ளார்.



டெக்ஸாஸின், ஆஸ்டின் நகரில் உள்ள விமான நிலையத்திற்கு வந்தபோது அவரை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தினர். டர்பனை கழற்றச் சொல்லி கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிங், தான் ஒரு தூதர் என்று கூறியுள்ளார். இருந்தாலும் டர்பனை கழற்றியே ஆக வேண்டும் என பாதுகாவலர்கள் கூறியுள்ளனர். ஆனால் முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து விட்டார் சிங்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினர் கட்டாயப்படுத்தி டர்பனை கழற்றும் சூழல் உருவானது. இதையடுத்து உள்ளூர் போலீஸார் தலையிட்டு அமைதியை ஏற்படுத்தினர். அதன் பின்னரே சிங் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து இந்திய அரசு, அமெரி்ககாவிடம் முறைப்படி புகார் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment