Thursday, December 9, 2010

ஐ.நா.வில் ஈரான் விஞ்ஞானி நியமனத்தை அமெரிக்கா தடுத்தது

வாஷிங்டன், டிச.7: ஐ.நா.வின் பருவநிலை மாறுபாடு குழுவின் முக்கிய பதவியில் ஈரான் விஞ்ஞானியை நியமிப்பதை அமெரிக்கா தடுத்து நிறுத்தியதாக விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை கைப்பற்றி அந்நாட்டுக்கு அதிர்ச்சியையும், தலைவலியையும் ஏற்படுத்தி வரும் விக்கி லீக்ஸ் இணையதளம், இப்போது ஈரான் விஞ்ஞானியின் நியமனத்தைத் தடுத்ததாக வெளியிட்டுள்ள தகவல், அமெரிக்காவுக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.



ஈரானின் பிரபல விஞ்ஞானி ஜாஃபரி. அவர் பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறார். ஜப்பான், பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாட்டு முக்கிய விஞ்ஞானிகளாலும் அவர் மதிக்கப்படுபவர். அந்நாட்டு அரசின் மூத்த அதிகாரியாகவும் உள்ளார். இவரை ஐ.நா.வின் பருவநிலை மாறுபாட்டு குழுவுக்கான வளரும் நாடுகளின் இணைத் தலைவர் பதவியில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான நடவடிக்கையை அந்தக் குழுவின் தலைவரும், விஞ்ஞானியுமான ஆர்.கே. பச்செüரி எடுத்துவந்தார்.
ஆனால் இதை அமெரிக்க அதிகாரிகள் விரும்பவில்லை. ஐ.நா.வில் ஈரானைச் சேர்ந்த ஜாஃபரியை நியமிக்கக்கூடாது என்று நெருக்குதல் அளித்தனர். இதை பச்செüரியால் மீற முடியவில்லை. ஜாஃபரிக்குப் பதிலாக ஆர்ஜெண்டீனாவைச் சேர்ந்த விஞ்ஞானியை நியமித்தார் என்று விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.




இந்தத் தகவல் ஈரானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மீதான அதன் கோபம் இதனால் மேலும் அதிகரித்துள்ளது.
பச்செüரி மறுப்பு: ஆனால் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலை பச்செüரி திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஐ.நா.வின் முக்கிய பதவியில் திறமையின் அடிப்படையில் முறையாகத்தான் ஆர்ஜெண்டீனாவைச் சேர்ந்த விஞ்ஞானி நியமிக்கப்பட்டார். இதில் சந்தேகம் வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்பு விக்கி லீக்ஸ் வெளியிட்ட தகவலுக்கு எல்லாம் அமெரிக்கா உடனடியாகப் பதில் அளித்து வந்தது. ஆனால் ஈரான் விஞ்ஞானி நியமனம் குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவலை அமெரிக்கா இதுவரை ஏற்றோ, மறுத்தோ கருத்து தெரிவிக்கவில்லை.

நன்றி:தினமணி  

No comments:

Post a Comment