Monday, January 30, 2012

BJP இரண்டாக உடைகிறது!


புதுடெல்லி:எந்த குற்றமும் செய்யாமல் பள்ளிப் பருவத்தில்(19-வயதில்) கைது. 14 ஆண்டுகள் தனிமைச் சிறை வாழ்வு. 20 ஜோடிக்கப்பட்ட குண்டுவெடிப்பு வழக்குகள். தளர்வாதத்தால் சோர்ந்து போன தாய். மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை நினைத்து மனம் உடைந்து மாரடைப்பால் மரணமடைந்த தந்தை.-இந்தியாவில் ஓர் அப்பாவி முஸ்லிமின் வாழ்க்கை எவ்வாறெல்லாம் சீரழிக்கப்படுகிறது என்பதற்கு அமீர்கான் மீண்டும் ஒரு உதாரணமாக திகழ்கிறார்.
1998-ஆம் ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி பொய் குற்றச்சாட்டை சுமத்தி சட்டத்திற்கு புறம்பான முறையில் டெல்லி போலீசாரால் அமீர்கான் பிடித்துச் செல்லப்பட்டார். மைமூனாபீ அமீர்கானின் தாயார் ஆவார். மூளையில் இரத்த நாளம் உடைந்து தளர்வாத நோயால் பாதிக்கப்பட்ட அவர் தனது மகனை 14 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்போம் என கருதவில்லை.
ஜனவரி 9, 2012 ஆம் ஆண்டு மகன் சிறையிலிருந்து விடுதலையான பிறகு அவரால் தனது மகிழ்ச்சியை உடனடியாக வெளிப்படுத்த இயலவில்லை. கடுமையான முயற்சிக்கு பிறகே வார்த்தைகள் உடைந்து போய் அவரிடமிருந்து வெளியாகின.
முஹம்மது அமீர்கான் மீது டெல்லியை சுற்றி நிகழ்ந்த குண்டுவெடிப்புகள் தொடர்பாக 20 வழக்குகள் சுமத்தப்பட்டன. தற்போது பலத்த சட்டரீதியான போராட்டத்திற்கு பிறகு 17 வழக்குகளிலிருந்து விடுதலையாகிவிட்டார். இம்மாதம்(ஜனவரி)தான் சிறையில் இருந்து வெளியே வந்தார். 3 வழக்குகள் மீதமுள்ளன. 2 வழக்குகளில் மேல்முறையீடுச் செய்யப்பட்டுள்ளது. ஒரு வழக்கில் டெல்லி நீதிமன்றம் ஆயுள் தண்டனையை ரத்துச் செய்தது.
14 ஆண்டுகால சிறை வாழ்க்கைக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியான அமீர்கான் முதலில் வானத்தை அண்ணாந்து பார்த்தார். “நான் கடந்த 14 ஆண்டுகளாக வானத்தில் நட்சத்திரங்களை பார்க்கவில்லை. நான் உயர் பாதுகாப்பு நிறைந்த தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். இரவு துவங்கும் முன்பே நான் சிறை அறையில் அடைக்கப்படுவேன். ஆதலால் என்னால் கடந்த 14 ஆண்டுகளாக நட்சத்திரங்களை பார்க்க முடியவில்லை. இப்பொழுது நான் வானத்தில் நட்சத்திரங்களை பார்த்து எனது சுதந்திரத்தை உணர்கிறேன்” என்று அமீர்கான் கூறுகிறார்.
14 ஆண்டுகள் தனிமைச் சிறை. மூன்றாம் தர(thirddegree torture) சித்திரவதைகள். அமீர் மாமூலான வாழ்க்கைக்கு திரும்ப பல மாதங்கள் தேவைப்படும்.
இவ்வளவு வழக்குகளில் இருந்து விடுபட்டு சிறையை விட்டு வெளியே வருவோம் என அமீர் நம்பவில்லை. ஆமை வேகத்தில் நடக்கும் நீதிமன்ற நடவடிக்கைகள் அவர் தனது நம்பிக்கையை இழந்திருந்தார்.


No comments:

Post a Comment