Thursday, January 5, 2012

பெண் டாக்டர் கொலையும் அதிர்ச்சி பின்னணியும்!

JAN 05: தூத்துக்குடி அழகிய துறைமுகப்பட்டினம். இதற்க்குமுத்து நகர் என்ற பெயரும் உண்டும். முக்கிய தொழில்களில் வளங்களில் ஒன்று உப்பு எடுப்பது. 

இப்படிபாட்ட அழகிய நகரமான தூத்துக்குடி நீண்ட  காலமாக  ரவுடிகளின் கைகளில் சிக்கி கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை என்று ரவுடிகள் சாம்பராஜியமாக ஆகிப்போனது.  

தூத்துக்குடி முக்கிய ரவுடிகள் பட்டியலில் திமுக எம்.எல்.ஏ. பெரியசாமி,  பசுபதிபாண்டியன் இவர்கள் அடக்கம். ரவுடிகள்தான் தூத்துக்குடியின்  எம்.எல்.ஏ.வாக வரமுடியும் என்ற ஒரு சிந்தனையும் நிலவிவந்தது. அப்படி நம்பித்தான்அதிமுக தூத்துக்குடியின் எம்.எல்.ஏ.வாக ரமேஷ் என்கிற ரவுடியை களம் இறக்கியது. பெரிய அரசியல் கட்சிகள் என்று சொல்லப்படும் கட்சிகள் தூத்துக்குடியில் திட்டமிட்டு ரவுடிகளை வளர்த்தனர். 

இப்படியாக அரசியல் பொறுக்கிகள் கையில் சிக்கி தூத்துக்குடி துறைமுக தொழிலாளர்களும், உப்பல தொழிலாளர்களும் அவதிப்பட்டனர். இது போதாதென்று தூத்துக்குடியின் சுகாதாரத்தை கெடுக்க ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை என்கிற ஆக்டோபஸ் வந்திறங்கியது. வடநாட்டில் எங்கும் அனுமதி கொடுக்கப்படாத இந்த ஆலை தமிழகத்தின் அரசியல் பொறுக்கிகளால் தூத்துக்குடியில் நிறுவப்பட்டு இன்றும் அந்த மக்களை கொல்லும் கொலை கருவியாக ஜொலிக்கிறது.

இப்படி  பல கொலைகளும், ஆள்கடத்தல்களும் நடக்கும் தூத்துக்குடி நகரம் இன்று அரசு டாக்டர் கொலை என்றதும்  அரசு இயந்திரங்கள் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்துள்ளன. அப்பாவி மக்கள் கொல்லப்படும்  போது போலீஸ் பொறுக்கிகள் லஞ்சத்தை வாங்கிகொண்டு அதை ஊக்குவித்து வந்தனர். ஒரு டாக்டர் கொலையானதும் மொத்த டாக்டர்களும் ஊர்வலம், ஸ்ட்ரைக் என்று தமிழகம் முழுவதும் கிளம்பிவிட்டார்கள். இதே அப்பாவி மக்கள் கொல்லப்பட்டபோது  இவர்களுக்கு ஆதரவாக யார் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினார்கள். 

டாக்டர் தொழில் என்பது ஒரு புனிதமானது, அது என்று வியாபாரம் ஆக்கினார்களோ அன்றே டாக்டர்கள் இதுபோன்ற அனத்தங்களை சந்திக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். சாதாரண பிரசவம் ஆக இருக்கும் எத்தனையோ பெண்களை பணத்துக்காக ஆப்பரேசன் செய்து கொன்றிருக்கிறார்கள். மொத்தத்தில் டாக்டர்களை பற்றி மக்கள் மனதில் ஒரு கெட்ட அபிப்ராயம் ஏற்பட்டுள்ளது என்பதையே இது காட்டுகிறது.


அதிகமான டாக்டர்கள் பண ஆசையில் செய்யும் கொலை பாதகத்துக்கு இதுபோல் சில டாக்டர்கள் பலியாகி போகிறார்கள் என்பது ஒரு சோகமான ஒரு நிகழ்வே. அரசு இயந்திரங்கள் சாதாரண மக்கள் விசயத்திலும் நீதி செலுத்த வேண்டும். அதுபோல் மக்களை சுரண்டும் டாக்டர்கள் விசயத்தில் சிறப்புச்சட்டம் கொண்டுவந்து இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment