Friday, January 6, 2012

எது வேண்டும்! அணுமின்நிலயமா? சேது சமுத்திர திட்டமா?

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கி நிற்கிறது சேது சமுத்திர கால்வாய் திட்டப்பணிகள். இந்நிலையில் சேது சமுத்திரத் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்துவது தொடர்பாக, பிரதமர் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையை தாக்கல் செய்யும் படி, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 




கூடங்குளம் அணு மின்நிலையத்தை திறக்க கூடாது என்று ஒட்டு மொத்த தமிழகமும் குரல் கொடுக்கும் போது அதை திறந்தே தீருவேன் என்று அடம் பிடிக்கிறது மன்மோகன் அரசு. அதற்காக ராணுவத்தையும் இறக்க ரெடி என்கிறது. ஆனால் தமிழகத்துக்கு நலன் உண்டாக்கும் சேதுசமுத்திர திட்டத்தை அமுல்படுத்த மாற்று வழி குறித்து ஆலோசனை என்று சொல்லி அந்த திட்டத்தை மூன்று ஆண்டுகள் கிடப்பில் போட்டுள்ளது. 


ஹிந்துத்துவா மதவாதம் பேசி தமிழர்களிடையே பிரிவினையை உண்டாக்கி வரும் வடஇந்திய இறக்குமதியான இந்து முன்னணியிடம் சரணடைந்த மத்திய அரசு கூடங்குளம் மக்கள் போராட்டத்தை நிராகரிப்பதென். கேட்டால் கூடங்குளத்தில் பலகோடி ரூபாய்கள் செலவழிக்கப்பட்டு விட்டதாக சொல்லும் மத்திய அரசு அதைக்காட்டிலும் அதிகமாக சேது சமுத்திர திட்டத்திற்கு செலவிடப்பட்டுள்ளது என்பதை மறந்ததேன். 


ராமர் பாலம் கடலுக்கடியில் இருப்பதாக சொல்லி இந்து முன்னணி தலைவர் ராமகோபால ஐயர் தொடர்ந்து ஒரு பொய் பரப்புரை செய்து வருகிறார். தமிழ் நாட்டுக்கு வருமானம் கொடுக்கும் ஒரு பாதுக்காப்பான திட்டத்தை நிறைவேற்ற தடையாக இருக்கும் இவரும் இவரது ஹிந்துத்துவா பரிவாரங்களும் நாசகார கூடங்குளம் அனுமின்னிலயத்தை உடனே திறக்கவேண்டும் என்று கோசம் போடுகின்றனர். தமிழர்களுக்கு நலம் உண்டாக்கும் திட்டங்களை புறக்கணிக்கும் இவர்கள் தமிழர்களுக்கு அழிவை உண்டாக்கும் திட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதேன். கடைசியாக ராமகோபால ஐயரிடம் மண்டியிட்டது  மன்மோகன் சிங் அரசு.

No comments:

Post a Comment