Thursday, January 5, 2012

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் பயங்கர தீ: பல கோடி சேதம்

டெல்லி:  டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில் திடீர் என்று தீவிபத்து ஏற்பட்டது. இதில் யாரும் பலியானதாக தகவல்கள் இல்லை.


டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில் உள்ள செல்பி என்ற நிறுவனத்தின் மனிதவள துறையில் நள்ளிரவு 12.45 மணிக்கு திடீர் என்று தீ பிடித்தது. இது குறித்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து 35 தீயணைப்பு வண்டிகள் விமான நிலையத்திற்கு விரைந்து வந்து சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தன.




சரக்கு முனையத்தின் முதல் தளத்தில் தீ பிடித்ததில் ஏர் இந்தியா, கல்ப் ஏர், தாய் ஏர், ஏரோபிலோட் உள்பட 10 பிரபல ஏர்லைன் நிறுவனங்களின் அலுவலகங்கள் தீயில் கருகி நாசமாகின. இதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இருப்பினும் குடோனில் இருந்த சரக்குகளுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


தீ பிடித்ததும் அங்கிருந்தவர்கள் விமான நிலையத்தில் உள்ள உபகரணங்களை வைத்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.


தீ விபத்துக்கான காரணம் என்னவென்று இன்னும் தெரியவில்லை.

No comments:

Post a Comment