Monday, January 16, 2012

எங்களைச் சீண்ட வேண்டாம்: ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!


"இராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்குப் பிறகு அமெரிக்கா கால் வைக்க நினைக்கும் இடம் ஈரானாக இருக்கலாம்" என்று சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்கக் கடற்படை  ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்பதற்காக ஈரான் கடந்த வாரம் ஹோர்முஸ் நீரிணையில் தன்னுடைய மிகப்பெரிய கடற்படைக் கப்பலைக் கொண்டுபோய் நிறுத்தியது.



இது தொடர்பாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஈரான் தன்னுடைய கடற்படைப் படகுகள் மூலம் எங்களைச் சீண்டிப் பார்க்கிறது. இதே நிலைமை நீடித்தால் அதன் விளைவை ஈரான் அனுபவிக்க நேரும்.

ஹோர்முஸ் நீரிணையில் சென்ற அமெரிக்கப் போர்க்கப்பலான நியூ ஆர்லியான்ஸ் கப்பலுக்கு அருகில் 2 போர்ப்படகுகள் வந்தன. அதில் இருந்தவர்கள் ஏ.கே. 47 ரகத் துப்பாக்கியை வெளியில் தெரியும்படி வைத்திருந்தனர். அவர்களில் ஒருவர் அந்தத் துப்பாக்கியையும் அமெரிக்கப் போர்க்கப்பலை நோக்கியே வைத்திருந்தார். மேலும் ஈரான் அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் அருகில் தன்னுடைய கடற்படைப் படகுகளை அதி வேகத்தில் இயக்கி, அச்சுறுத்துவதைப் போல நடந்துகொள்கிறது.


மேலும் ஈரான் அணு ஆயுதம் தயாரித்து அதைத் தன்னுடைய நட்பு நாடுகளுக்குத் தருகிறது" என்று குற்றச்சாட்டுகளை ஈரான் மீது அமெரிக்கா சுமத்துகிறது.

ஈரான் மீது ராணுவ ரீதியான நடவடிக்கைகளை எடுக்கத் தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. எனவே அதனுடைய குற்றச்சாட்டுகளைச் சாதாரணமாகக் கருதிவிட முடியாது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

No comments:

Post a Comment