Tuesday, January 3, 2012

ஹமாஸ் தலைவர் இஸ்மையில் ஹனியாவுக்கு துருக்கியிலும் அமோக வரவேற்பு



 பலஸ்தீன காஸா பிரதமரும் ஹமாஸ் இயக்கத்தின் முன்னணித் அரசியல் தலைவர்களுள் ஒருவருமான இஸ்மையில் ஹனியா நேற்று துருக்கி சென்றுள்ளார் துருக்கி சென்றுள்ள அவருக்கு துருக்கி மக்கள் அமோக வரவேற்பு வழங்கியுள்ளனர் , துருக்கி பிரதமர் ரஜப் தயூப் அர்துகான் அவருக்கு விசேட வரவேற்பு வழங்கியுள்ளார். இரு தலைவர்களுக்கும் இடையில் பல விடயங்கள் கலந்தாலோசிக்ப்பட்டுள்ளது. இதன்போது காஸாவுக்கான விசேட உதவி திட்டம் ஒன்றை துருக்கி பிரதமர் அறிவித்துள்ளார்.

அங்கு இஸ்ரேலினால் தாக்கப்பட்ட துருக்கிய கப்பல் மாவில் மர்மாவையும் பலஸ்தீன் தலைவர் சென்று பார்வையிட்டுள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு முற்றுகைக்கு உள்ளாகியுள்ள காஸாவுக்கு நிவாரண உதவி பொருட்களை எடுத்துச் சென்ற மாவில் மர்மா கப்பல் தாக்கப்பட்டு 9 துருக்கிய உதவியாளர்கள் சஹீதானார்கள். அந்த கப்பலையும் இஸ்மையில் ஹனியா பார்வையிட்டுள்ளார்.
அதன்போது அங்கு பெரும்தொகையில் திரண்ட மக்கள் மத்தியில் உரையாற்றிய இஸ்மாயில் ஹனியா துருக்கியில் கிலாபத் இருந்தபோது எப்படி அதன் கலிபாவினால் பலஸ்தீன் பாதுகாக்க பட்டது என்பது பற்றியும் குத்சின் பூமியில் இருந்து இஸ்லாமிய துருக்கிக்கு கிலாபத் நாகரீகத்தின் துருக்கிக்கு தான் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் ”உங்களின் உயிர் தியாகிகள் எங்களின் உயிர் தியாகிகள், உங்களின் இரத்தம் அது எங்களின் இரத்தம் உங்களின் காயங்கள் அது எங்களின் காயங்கள்” என்று தெரிவித்துள்ளார் துருக்கியில் பெருந்தொகையான மக்கள் திரண்டு அவருக்கு வரவேற்பு வழங்கியமை குறிபிடத்தக்கது.
இதற்கு முன்னர் எகிப்து சென்றிருந்தார் அங்கும் அவருக்கு மக்களினால் அமோக வரவேற்று வழங்கப்பட்டுள்ளது. அவர் தனது விஜயத்தின் போது எகிப்தின் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் முக்கிய தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுளார். கடந்த 2007 ஆம் ஆண்டு காசாவை இஸ்ரேல் முற்றுகை இட்டு தனது முழு அளவிலான தடைகளை விதித்ததை தொடர்ந்து ஹமாஸ் அமைப்பு பிரதமர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருப்பது இது முதல் முறையாகும்.
காஸா  பகுதியை கட்டியெழுப்பும் நோக்கில் பிராந்திய நாடுகளிடம் உதவிகளை கோருவதே இந்த சுற்றுப் பயணத்தின் பிரதான நோக்கம் என ஹமாஸ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் போது இஸ்மைல் ஹனியான் எகிப்து, துருக்கி ,துனீஷியா, சூடான், கட்டார், பஹ்ரைன் ஆகிய நாட்டுத் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டமை குறிபிடத்தக்கது.

No comments:

Post a Comment