Friday, January 13, 2012

ஈரான் மீதான தடையை ஆதரிக்கமாட்டோம் – சீனா அறிவிப்பு


பீஜிங்:ஈரான் மீதான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கொண்டுவந்துள்ள தடைகளை ஆதரிக்க மாட்டோம் என சீனா அறிவித்துள்ளது.
ஈரானின் எண்ணெய் மீது தடையை அறிவித்துள்ள அமெரிக்காவின் நிதித்துறை செயலாளர் திம்மத்தி கீத்னர் இதற்கு ஆதரவைக்கோரி சீனா சென்றுள்ளார். அவரிடம் சீனா, தனது முந்தைய நிலைப்பாட்டில் மாற்றமில்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
சீன பிரதம்ர் ஜியபாவோ, சீனாவின் எதிர்கால தலைவராக கருதப்படும் துணை அதிபர் ஸி ஜின் பிங் ஆகியோருடன் கீத்னர் பேச்சுவார்த்தை நடத்தினார்.


ஈரான் ஏற்றுமதிச்செய்யும் மூன்றில் ஒரு பங்கு எண்ணெயையும் சீனா வாங்குகிறது.
செய்தியாளர்கள் சந்திப்பில் சீனாவின் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஸாய் ஜுன் கூறியதாவது: அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ஏற்படுத்தியுள்ள தடை, ஈரானின் எண்ணையை இறக்குமதி செய்வதிலிருந்து எங்களை பாதிக்காது. தடைகள், பிரச்சனைகளுக்கு பரிகாரம் காண்பதற்கு போதுமானதல்ல. ஈரானின் புதிய யுரேனியம் செறிவூட்டுவதற்கான விவகாரம் தொடர்பாக ஈரானும், சர்வதேச அணுசக்தி ஏஜன்சியும் பரஸ்பரம் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும்.’ இவ்வாறு ஸாய் ஜுன் கூறினார்.

No comments:

Post a Comment