Monday, January 2, 2012

தாலிபான்-அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு பிரான்சு ஆதரவு


பாரிஸ்:தாலிபானுடன் நல்லிணக்க பேச்சுவார்த்தைக்கான அமெரிக்காவின் முயற்சிக்கு பிரான்சு ஆதரவு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் பிரான்சு ராணுவத்தினரிடையே உரை நிகழ்த்திய அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஜெராட் லாங்க்வெட் தாலிபானுடன் அமைதிக்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தார்.
தாலிபானுடன் அமைதிக்கான முயற்சியின் ஒரு பகுதியாக கத்தரில் ஒரு அலுவலகத்தை திறக்க அமெரிக்கா முயன்று வரும் வேளையில் பிரான்சு தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

கத்தரில் தாலிபானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அலுவலகத்தை திறக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு ஆப்கான் அதிபர் ஹமீத் கர்ஸாயி ஆதரவு அளித்திருந்தார். அரசுடன் அமைதி ஒப்பந்தம் செய்ய விரும்புவர்களுக்கு பேச்சுவார்த்தைகள் உதவும் என லாங்க்வெட் கூறினார். தாலிபான் பிரதிநிதிகளுடன் ஐரோப்பாவிலும், வளைகுடா நாடுகளிலும் ரகசிய பேச்சுவார்த்தையை அமெரிக்கா நடத்தும் என அமெரிக்க அதிகாரியை மேற்கோள்காட்டி அசோசியேட் ப்ரஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

No comments:

Post a Comment