Monday, January 2, 2012

1948 ஃபலஸ்தீன் இனப் படுகொலைப் பற்றி உண்மையை வெளிக்கொணரும் முன்னாள் இஸ்ரேல் வீரர்

1948-ல் ஃபலஸ்தீன் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நடைபெற்ற போரில், ஃபலஸ்தீனுக்கு எதிராக இஸ்ரேலால் மேற்க்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள், இன அழிப்பு, படுகொலைகள், குடியேற்றம் மற்றும் இனவாதம் பற்றி முன்னாள் இராணுவ அதிகாரி அம்னன் நெயுமான் தனது வீடியோ சாட்சியத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் 

அந்த போரில் அவர் பாதுகாப்பற்ற ஃபலஸ்தீனியர்களை அவர்களின் கிராமங்களை விட்டு வெளியேற்றவும், கொலை செய்யவும், அவர்கள் இருப்பிடங்களை எரித்து, குழந்தைகள் மற்றும் பெண்களை சூறையாடவும் தான் பெரிதும் உதவியதாக தெரிவித்துள்ளார்.

‘நாங்கள் நிலத்தை மரபுரிமைக் கொள்ளவே வந்தோம், அதில் நாங்கள் தெளிவாக உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இஸ்ரேலின் மூத்த மற்றும் முன்னாள் போர் வீரர் தெரிவித்ததாவது, 1948-ல் மேற்க் கொண்ட ‘நக்பா’-விற்கு காரணம் சியோனிச கருத்தியலே என்றும், சியோனிசம் என்றால் தேசிய தீவிரவாதத்தை மேற்க்கொள்வதே என்றும், கொலை, இருப்பிடங்களை ஆக்கிரமிப்பது மற்றும் அதற்க்கான ஆதராங்களை அடியோடு அழிப்பது, அழிவில் இருந்து தப்பியவர்களை நிரந்தரமாக ஒரு பொறுப்புமிக்க இனவாதிகளிடம் ஒப்படைப்பதே ஆகும்.
1948-ல் ஃபலஸ்தீனர்களின் இருப்பிடத்தை இஸ்ரேல் கையகப்படுத்தியதே நக்பா ஆகும், அதாவது ஏழு லட்சத்திற்கும் மேற்ப்பட்ட ஃபாஸ்தீனியர்களை கட்டயாமாக அவர்களது நாட்டைவிட்டு வெளியேற்றி மற்ற நாடுகளுக்கு இடம் பெயர்க்க செய்தது.
ஆனால் இன்று வரை டெல்அவிவ் 1948-ல் கையகப்படுத்தியதை ஃபலஸ்தீனியர்களுக்கு திருப்பி கொடுக்க முன்வரவில்லை என்றும், மேலும் அவர்கள் நீண்ட கால அகதிகளாக இன்றும் வாழ்ந்து வருகின்றனர் என்றும் இழந்த அவர்களது நிலத்தை மீட்க அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு, அவர்கள் 1948-1967-ல் நடைபெற்ற இஸ்ரேல்-அரபு யுத்தத்தில் கட்டாயமாக கைவிடபட்டவர்கள் என்றும் அந்த மூத்த இஸ்ரேலிய வீரர் கருத்து தெரிவித்தார்.

No comments:

Post a Comment