Pages
- Home
- முத்துப்பேட்டையின் முதல்வர்கள் மற்றும் தியாகிகள்
- சரித்திரம் படைத்தவர்கள்
- புகைப்படங்கள்
- SCHOLARSHIP (OR) கல்வி உதவித்தொகை விபரம்
- பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்கள்
- முத்துப்பேட்டை தொலைபேசி எண்கள்
- குர்-ஆண்,ஹதீஸ் கூறும் துஆக்கள்
- ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்!
- தினந்தோறும் ஓத வேண்டிய சில துஆக்கள்
- தொடர்புக்கு
Friday, November 15, 2013
மோடி பிரதமராக முடியுமா?கார்பொரேட்கள் ஊதும் மோடி பலூன் பறக்குமா?
ஆர்.எஸ்.எஸ்சும் கார்பொரேட்களும் இன்று கூட்டாக நின்று மோடியை முன்நிறுத்துவதில் இன்னொரு ஆபத்தும் உள்ளது. இந்திய ஜனநாயகமும் தேர்தலும் குடியரசுத் தலைவர் (Executive Presidential Form) வழிப்பட்டதல்ல.
இங்கு பிரதமர் வேட்பாளர் யார் என்பது முக்கிய கேள்வியல்ல. ஆனால் கார்பொரேட்களும் ஆர்.எஸ்.எஸ்சும் இந்தத் தேர்தலை ஒரு குடியரசுத் தலைவர் வழிப்பட்ட ஜனநாயகத் தேர்தலைப் போல நடத்த முற்பட்டுள்ளன. மோடியா இல்லை ராகுலா என்கிற கேள்வியை மட்டுமே முன் வைத்துப் பிரச்சாரம் மேற்கொள்கின்றன. காங்கிரஸ் கூட அப்படி ராகுலை முன்னிறுத்தவில்லை.
Wednesday, November 6, 2013
Tuesday, November 5, 2013
முத்துப்பேட்டையில் மழை-சில புகைப்படங்கள்
முத்துப்பேட்டையில் இன்று மாலை 3 மணி அளவில் பலத்த மழை பெய்தது .இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது.
இதோ சில புகைப்படங்கள் உங்களுக்காக.
![]() |
photo byAzeez Ahamed |
இதுதான் பார்ப்பனீயம்!
திருவாளர் சோ என்று ஒருவர் இருக்கிறார். நடுநிலைக்கே அவர்தான் குத்தகைதாரர் என்று பார்ப்பன ஊடகங்களால் முடிசூட்டப் பட்டவர். நம்ம சூத்திர முண்டங்கள் சிலதுகளும் இதனை வழிமொழிவதுண்டு. இரட்டைநாக்குப் பேர்வழியான இந்தப் புளுகுணி தன் இனத்தின் நலனை மட்டுமே முன்னிறுத்திப் பேசும்; எழுதும். பல நூறுமுறை இதன் பார்ப்பனக் குள்ளநரித்தனத்தை நாம் தோலுரித்திருக்கிறோம்.
Monday, November 4, 2013
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சென்னையில் நடத்திய “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்“ விழிப்புணர்வு பிரச்சார துவக்க விழா!
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும்“ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த வருடம் நவம்பர் 01 முதல் 15 ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மினி மாரத்தான், உடற்பயிற்சி வகுப்புகள், ஆரோக்கியம் தொடர்பான மருத்துவ முகாம்கள், இரத்த தான முகாம்கள், அரசு மருத்துவமனைகளை தூய்மைப்படுத்துதல் போன்ற பல்வேறு நலப் பணிகள் முழுவீச்சில் மக்களின் பேராதரவுடன் நடைபெற உள்ளது.
முத்துப்பேட்டையில் பரவலாக மழை-ஒரு நாள் மழைக்கே ஓடிப்போன சாலைகள்!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது எனினும் முத்துப்பேட்டையில் பருவமழை கடந்த இரண்டு நாளாக விட்டு விட்டு பெய்துவருகிறது.
![]() |
photo by Yunus Khan |
Saturday, November 2, 2013
நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?: மோடிக்குச் சவால்!
புதுடெல்லி: "பொய்யிலேயே அரசியல் செய்யும் மோடி, நாட்டின் வளர்ச்சி பணிகள் முதல் எந்த ஒரு விசயத்திலும் நேரடியாக விவாதிக்க தயாரா?" மோடிக்கு மத்திய அமைச்சர் கபில் சிபல் சவால் விடுத்துள்ளார்.
மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் கபில்சிபல் செய்தியாளர்களிடம் பேசும்போது இவ்வாறு மோடிக்குச் சவால் விடுத்தார். மேலூம் அவர் கூறியதாவது:
"நரேந்திர மோடி பேசும் மேடைகள் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து பல்வேறு பொய்களை அவர் பேசி வருகிறார். இவரது பேரணிக்கு 10 முதல் 15 கோடி வரை செலவிடப்படுகிறது. இது எங்கிருந்து வந்த பணம்? இது கள்ளப்பணமா? இது குறித்துவிசாரணை நடத்த உத்தரவிடப்படும்.
கறுப்பு பணத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் மோடி பேரணியில் கறுப்பு பணம் புழங்குவதாக எனக்கு தகவல் கிடைக்கிறது. பிரதமர் பதவியை பிடிக்க வேண்டும் என்ற வெறியில் மோடி திரிகிறார். ஆனால், அதற்கான வெளிப்படைத்தன்மையிலும், பொறுப்பிலும் அவருக்கு நம்பிக்கை இல்லை.
இவரது திட்டமென்ன? நான் அவருக்குச் சவால் விடுகிறேன். எந்தவொரு விஷயமானாலும், எந்தவொரு கேள்விக்கும், பதிலுக்கும் நான் ரெடி! நீங்களே தேதியை, இடத்தைச் சொல்லுங்கள்! என்னுடன் நேரடி விவாதத்திற்குத் தயாரா?
இவரது திட்டமென்ன? நான் அவருக்குச் சவால் விடுகிறேன். எந்தவொரு விஷயமானாலும், எந்தவொரு கேள்விக்கும், பதிலுக்கும் நான் ரெடி! நீங்களே தேதியை, இடத்தைச் சொல்லுங்கள்! என்னுடன் நேரடி விவாதத்திற்குத் தயாரா?
ஆனால் அவர் இதனைச் செய்ய மாட்டார். இது வரை மோடி ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பும் நடத்தியதில்லை. இவர் என்னோடு எதனை விவாதிக்க போகிறார்? மோடியின் நிலை என்ன? பாதுகாப்பில் இவரது திட்டமென்ன? ஏதாவது வளர்ச்சி பணிகள் குறித்து பேசுகிறாரா? நாட்டின் எதிர்கால திட்டம் குறித்து ஏதாவது மோடி சொல்லட்டும். ஒரு தனி மனிதன் இந்த நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானித்து விட முடியாது. அவர் அனைத்து கூட்டங்களிலும் பொய்யான தகவலையே தெரிவிக்கிறார்".
70 பழங்குடி கிராமங்களின் மக்களை வெளியேற்றிவிட்டு படேலின் சிலையை எழுப்பும் மோடியின் சர்வாதிகாரம்: எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கைது!
புதுடெல்லி: சர்தார் வல்லபாய் பட்டேலின் பெயரால் குஜராத்தில் ஒருமைப்பாட்டு சிலையை நிறுவும் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடி 70 பழங்குடி மக்கள் வாழும் கிராமங்களில் இருந்து அவர்களை விரட்டியடித்துள்ளார். மோடி அரசின் அராஜகத்திற்கு எதிராக குரல் எழுப்பியவர்களை போலீஸ் கைதுச் செய்துள்ளது. பழங்குடி மக்களை கூட்டாக வெளியேற்றியதற்கு எதிராக அப்பகுதியில் எதிர்ப்பு வலுவடைந்துள்ளது. மேதா பட்கரின் தலைமையில் என்.ஏ.பி.எம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மக்கள் கூட்டாக வெளியேற்றப்படுவதற்கும், போலீஸ் பயங்கரவாதத்திற்கும் எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன.
திருவாரூரில் மனித நேய மக்கள் கட்சி ஆர்பாட்டம்.
இலங்கையில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பிரதமர் உட்பட யாரும் கலந்து கொள்ளக்கூடாது என வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி நடத்தும்
”மாபெரும் ரயில் மறியல் பேராட்டம்”
இடம்: திருவாரூர் ரயில் நிலையம்
நாள்: 7.11.2013 | மதியம் 2 மணி
கண்டன உரை:
எம்.தமிமுன் அன்சாரி
(மமக பொதுச் செயலாளர்)
அன்புடன் அழைகிறது
மனிதநேய மக்கள் கட்சி, திருவாரூர் மாவட்டம்
Friday, November 1, 2013
தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஒரு பகிரங்க மடல்!
சகோதரி தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு,
ஜூனியர் விகடன் 30.10.13 இதழ் படித்தேன். “விதாண்டாவதத்தால் மோடியை வீழ்த்த முடியாது” என்ற தலைப்பில் வெளிவந்த பேட்டியில் ஆதாரமற்ற தகவல்களை, உண்மை போல் கூறியது கொஞ்சமும் அரசியல் நாகரிகமில்லாததாகும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அத்வானியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி, எவ்வளவோ கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டு ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்று நினைத்தீர்கள். ஆனால், மக்களிடம் அந்த பிம்பங்கள் எடுபடவில்லை.
13 மாநிலங்களில் ஒரு முஸ்லிம் அமைச்சர் கூட இல்லை: பா.ஜ.கவுக்கு ஒரு முஸ்லிம் எம்.எல்.ஏவும் இல்லை!
புதுடெல்லி: இந்தியாவில் 13 மாநிலங்களில் ஒரு முஸ்லிம் அமைச்சர் கூட இல்லை. முஸ்லிம் வாக்குகளுக்காக தந்திரங்களை கையாளும் காங்கிரசுக்கும், மோடியின் பா.ஜ.கவுக்கு வித்தியாசம் இல்லை.பா.ஜ.கவில் ஒரு முஸ்லிம் எம்.எல்.ஏ கூட இல்லாதது அக்கட்சியின் முஸ்லிம் விரோத போக்கிற்கு சிறந்த உதாரணமாகும். ஆனால், முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறோம் என்று நாடுமுழுவதும் பிரச்சாரம் செய்து வரும் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களிலும் நிலை மிக மோசமாக உள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் பற்றிய எந்த தகவல்களையும் ஊடகங்களோடு பகிர்ந்து கொள்ள வில்லை என IB மற்றும் NIA மறுப்பு!
பாப்புலர் ஃப்ரண்ட் ஒரு தீவிரவாத இயக்கம் என சித்தரித்து எந்த தகவல்களையும், ஊடகங்களோடு பகிர்ந்து கொள்ள வில்லை என்று புலனாய்வு அமைப்புகளான IB (Intelligence Bureau)மற்றும் NIA (NationalInvestigation Agency) மறுப்பு தெரிவித்துள்ளது. இந்திய பிரஸ் கவுன்சில் (Press Council of India - PCI) அனுப்பிய நோட்டிசுக்கு பதில் அளித்துள்ள புலனாய்வு அமைப்புகள், பாப்புலர் ஃப்ரண்டை தீவிரவாத இயக்கமென சில பத்திரிக்கைகள் கூறுவது போல் எந்த ஒரு தகவலும் தங்களிடம் இல்லை என பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
முத்துப்பேட்டை அருகே சாலை விபத்து !
முத்துப்பேட்டையை அடுத்த தம்பிக்கோட்டை ஐயப்பன் கோவில் அருகே உமா தேவி மினி பேருந்து மற்றும் நிலா சீ புட்ஸ் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
பேருந்து ஓட்டுனர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பேருந்தில் முன் பகுதி விபத்தினால் சேதம் அடைந்தது.இதனால் பேருந்து JCB இயந்திரம் கொண்டு மீட்கப்பட்டது இதனால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டுள்ளது.
NEWS :முத்துப்பேட்டை டுடே
பேருந்து ஓட்டுனர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பேருந்தில் முன் பகுதி விபத்தினால் சேதம் அடைந்தது.இதனால் பேருந்து JCB இயந்திரம் கொண்டு மீட்கப்பட்டது இதனால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டுள்ளது.
NEWS :முத்துப்பேட்டை டுடே
Subscribe to:
Posts (Atom)