Saturday, November 2, 2013

70 பழங்குடி கிராமங்களின் மக்களை வெளியேற்றிவிட்டு படேலின் சிலையை எழுப்பும் மோடியின் சர்வாதிகாரம்: எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கைது!

புதுடெல்லி: சர்தார் வல்லபாய் பட்டேலின் பெயரால் குஜராத்தில் ஒருமைப்பாட்டு சிலையை நிறுவும் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடி 70 பழங்குடி மக்கள் வாழும் கிராமங்களில் இருந்து அவர்களை விரட்டியடித்துள்ளார். மோடி அரசின் அராஜகத்திற்கு எதிராக குரல் எழுப்பியவர்களை போலீஸ் கைதுச் செய்துள்ளது. பழங்குடி மக்களை கூட்டாக வெளியேற்றியதற்கு எதிராக அப்பகுதியில் எதிர்ப்பு வலுவடைந்துள்ளது. மேதா பட்கரின் தலைமையில் என்.ஏ.பி.எம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மக்கள் கூட்டாக வெளியேற்றப்படுவதற்கும், போலீஸ் பயங்கரவாதத்திற்கும் எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன.


’சிலை வைப்பதன் மூலம் குஜராத் அரசு கொண்டுள்ள நோக்கம் என்ன?’ என்பதை தெளிவுப்படுத்தவேண்டும் என்ரு என்.ஏ.பி.எம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. கொண்டாடப்படும் ‘ஒற்றுமை’ எதற்கு? யாருக்கு எதிராக? என்று என்.ஏ.பி.எம் கேள்வி எழுப்புகிறது. இது ஒற்றுமைக்கான திட்டம் அல்ல. மாறாக,நயவஞ்சகமான அரசு திட்டம் என்று என்.ஏ.பி.எம் அறிக்கை குற்றம்சாட்டுகிறது. பழங்குடியின மக்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து அகற்றிவிட்டு சிலை நிர்மாணிக்கப்படுவதன் நோக்கம் மோடி அரசின் சுற்றுலா திட்டமாகும்.
சர்தார் சரோவர் திட்டத்தின் மூலம் நர்மதா நதியில் அணைகள் கட்டியபோது கூட்டாக வெளியேற்றப்பட்ட லட்சக்கணக்கான பழங்குடியின மக்களின் துயரமான வாழ்க்கையை சந்தித்துள்ளனர். மூன்று மாநிலங்களில் பரந்து கிடக்கும் அணைக்கட்டின் அருகில் உள்ள பகுதிகளில் 50 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றனர். அணைக்கட்டின் உயரத்தை 139 அடியாக உயர்த்தும் முயற்சியில் குஜராத், மத்தியபிரதேச அரசுகள் ஈடுபட்டுள்ளன. இதன் மூலம் இக்குடும்பங்கள் வெள்ளத்தின் அடியில் செல்லும் அபாயம் ஏற்படும்.
சர்தார் சரோவர் திட்டத்தின் துவக்கத்தில் 1961-ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட பழங்குடியின மக்களை இதுவரை மீள் குடியமர்த்தவில்லை.

No comments:

Post a Comment