Friday, November 15, 2013

மோடி பிரதமராக முடியுமா?கார்பொரேட்கள் ஊதும் மோடி பலூன் பறக்குமா?

ர்.எஸ்.எஸ்சும் கார்பொரேட்களும் இன்று கூட்டாக நின்று மோடியை முன்நிறுத்துவதில் இன்னொரு ஆபத்தும் உள்ளது. இந்திய ஜனநாயகமும் தேர்தலும் குடியரசுத் தலைவர் (Executive Presidential Form) வழிப்பட்டதல்ல.
இங்கு பிரதமர் வேட்பாளர் யார் என்பது முக்கிய கேள்வியல்ல. ஆனால் கார்பொரேட்களும் ஆர்.எஸ்.எஸ்சும் இந்தத் தேர்தலை ஒரு குடியரசுத் தலைவர் வழிப்பட்ட ஜனநாயகத் தேர்தலைப் போல நடத்த முற்பட்டுள்ளன. மோடியா இல்லை ராகுலா என்கிற கேள்வியை மட்டுமே முன் வைத்துப் பிரச்சாரம் மேற்கொள்கின்றன. காங்கிரஸ் கூட அப்படி ராகுலை முன்னிறுத்தவில்லை.



இந்தியா இரு கட்சி முறைக்கு உகந்த நாடல்ல; பல்வேறு மொழி, இன, மத, சாதி மக்கள் வசிக்கும் ஒரு நாட்டில் இது சாத்தியமல்ல. 1984 வரை வெறும் 19 கட்சிகளே இருந்த நிலை மாறி இன்று 39 கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலில் பங்கு பெறுகின்றன. இந்நிலையில் இரு கட்சி மற்றும் குடியரசுத் தலைவர் ஆட்சி முறைபோல இந்தத் தேர்தலை நடத்த முயல்வதிலும் கார்பொரேட்கள் தோற்கத்தான் போகின்றன.

மோடியை ஆதரிப்பதற்கு அவரும் அவரது பா.ஜ.கவும் காங்கிரசைக் காட்டிலும் ஈழத் தமிழர் பிரச்சினையில் ஆதரவாக இருப்பார்கள் என வைகோ முதலானோர் சொல்லி வருவதைப் போன்ற அபத்தம் எதுவுமில்லை. இந்திய, இலங்கைப் பிரதமர்களாக டெல்லியிலிருந்து “இலங்கையின் இறையாண்மையை காப்பது” என வெளியிட்ட அறிக்கையே பா.ஜ.கவின் இலங்கைக் கொள்கை என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அதில் எந்த மாற்றங்களும் ஏற்பட்டதற்கான தடயங்களே இல்லை.
இன்று ஆர்.எஸ்.எஸ் காரர்கள் ராஜபக்‌ஷேவுடன் சேர்ந்து இலங்கையில் அசோகவனம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். சுஷ்மா ஸ்வராஜ் போய் ராஜபக்ஷேவைப் பார்த்து அசடு வழிந்து பரிசுப் பொருட்கள் வாங்கி வந்ததை எல்லாம் விட்டுவிட்டால் கூட, இரண்டு மாதங்களுக்கு முன் ஆர்.எஸ்.எஸ் குழு ஒன்று சென்று யாழ்ப்பாணத்தில் அப்படி ஒன்றும் டெல்லியில் உள்ளதைக் காட்டிலும் அதிகமாகப் படைகள் நிறுத்தப்படவில்லை என 'செர்டிஃபிகேட்' கொடுத்து வந்ததை மறந்துவிட இயலாது.


தமது இயல்பான இந்துத்துவ ஆதரவைக் காட்ட தமிழ்த் தேசியர்கள் மேற்கொள்ளும் உத்திதான் இது. இதை நான் பல ஆண்டுகளாகத் திருப்பித் திருப்பிச் சொல்லி வருகிறேன். இந்துத்துவம் தமிழகத்தில் வேரூன்றியுள்ள பெரியாரியத்தை ஒழித்துக்கட்ட இன்று தமிழ்த் தேசியத்தைக் கொஞ்சி மகிழ்கிறது. சாதித் திமிரை வெளிப்படுத்தும் நபர்கள், இயக்கங்கள் எல்லாவற்றையும் ஈழ ஆதரவு என்கிற பெயரில் மேடை ஏற்றுவதுதான் இன்று தமிழ்த் தேசிய வாதிகளின் நோக்கமாக உள்ளது. முள்ளிவாய்க்கால் முற்ற விழாவில் நடநாசனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவமும் பொன் ராதாகிருஷ்ணன், சிதம்பரம் கோவிலில் தமிழ் வழிபாடு கூடாது என இயக்கம் நடத்திய அர்ஜுன் சம்பத் எல்லாம் மேடை ஏற்றப்படுவதும் இதற்கொரு சான்று.

No comments:

Post a Comment