Monday, November 4, 2013

பயங்கரவாதத்திற்கு எதிரான போர்!

அமெரிக்காவின் கூட்டணியைச் சார்ந்த உடகங்களும் அமெரிக்காவின் அடிச்சுவட்டைப் பின்பற்றி பயன்படுத்திய வார்த்தை தான் பயங்கரவாதத்திற்கு எதிரான போர்.


ஜிஹாத், தீவிரவாதி, பயங்கரவாதி போன்ற சொற்கள் முஸ்லிம்களுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்திலும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.  எண்ணெய் வளம் நிறைந்த பகுதிகளில் உள்ள நாடுகளை ஒன்றன் பின் ஒன்றாகத் தாக்கி அவற்றையும் தங்கள் ஆதிக்கத்திற்கு உட்படுத்தவேண்டும் என்பதே அமெரிக்காவின்நோக்கம்.
இந்தியாவில் இந்துத்துவாவும் தம் அரசியல் கனவுக்காக அமெரிக்காவின் அதே அடிச்சுவட்டைப் பின்பற்றுகிறது. மதத்தின் பெயரால் எளிதில் ஏமாறக்கூடிய மக்களை தம் மதஅரசியலுக்கு ஆதரவளிக்க புனையப்பட்ட சொற்களே இவை.
தற்பொழுது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என அமெரிக்கா மார்தட்டிக்கொண்டாலும் அமெரிக்கா மற்றும் அமெரிக்காவின் கூட்டணிப்படையினரின் பயங்கரவாத செயல்களே உலகில் மாறாத ரணங்களாக இன்னமும் தொடர்கின்றன.

இரண்டாவது உலகப்போருக்குப் பின் அமெரிக்கா குண்டுவீசிய நாடுகளின் பட்டியல் ஆண்டு வரிசையில் கீழே:
சீனா -1945-46
கொரியா-1950-53
குவாதிமாலா-1954,1967-69
இந்தோனேசியா-1950-60
கிய+பா-1959-60
பெல்ஜியன்காங்கோ-1964
பெரு-1965
லாஓஸ்-1964-73
வியட்நாம்-1961-73
கம்போடியா-1969-71
கிரனடா-1983
எல்சால்வடோர்-1980
நிகார்குவா-1980
பனாமா-1989
ஈராக்-1991-99
போஸ்னியா-1995
ச+டான்-1998
யுகோஸ்லாவியா-1999
ஆப்கானிஸ்தான்-2001
ஈராக்-2003
லிபியா-1986
ஈரான், சிரியா மற்றும் வடகொரியா
உலகில் பயங்கரவாதத்தை விதைத்ததும் அது விருட்சமாய் வளர்ந்து நிற்பதற்கும் அடிப்படை காரணமாக விளங்கும் அமெரிக்காவின் அடிச்சுவட்டைப் பின்பற்றுவோர், தாம் பின்பற்றுவதுதான் உண்மையான பயங்கரவாதம் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்!
- வைகை அனிஷ்

No comments:

Post a Comment