Saturday, November 2, 2013

நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?: மோடிக்குச் சவால்!

புதுடெல்லி: "பொய்யிலேயே அரசியல் செய்யும் மோடி, நாட்டின் வளர்ச்சி பணிகள் முதல் எந்த ஒரு விசயத்திலும் நேரடியாக விவாதிக்க தயாரா?" மோடிக்கு மத்திய அமைச்சர் கபில் சிபல் சவால் விடுத்துள்ளார்.

மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் கபில்சிபல் செய்தியாளர்களிடம் பேசும்போது இவ்வாறு மோடிக்குச் சவால் விடுத்தார். மேலூம் அவர் கூறியதாவது:
"நரேந்திர மோடி பேசும் மேடைகள் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து பல்வேறு பொய்களை அவர் பேசி வருகிறார். இவரது பேரணிக்கு 10 முதல் 15 கோடி வரை செலவிடப்படுகிறது. இது எங்கிருந்து வந்த பணம்? இது கள்ளப்பணமா? இது குறித்துவிசாரணை நடத்த உத்தரவிடப்படும்.
கறுப்பு பணத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் மோடி பேரணியில் கறுப்பு பணம் புழங்குவதாக எனக்கு தகவல் கிடைக்கிறது. பிரதமர் பதவியை பிடிக்க வேண்டும் என்ற வெறியில் மோடி திரிகிறார். ஆனால், அதற்கான வெளிப்படைத்தன்மையிலும், பொறுப்பிலும் அவருக்கு நம்பிக்கை இல்லை.

இவரது திட்டமென்ன? நான் அவருக்குச் சவால் விடுகிறேன். எந்தவொரு விஷயமானாலும், எந்தவொரு கேள்விக்கும், பதிலுக்கும் நான் ரெடி! நீங்களே தேதியை, இடத்தைச் சொல்லுங்கள்! என்னுடன் நேரடி விவாதத்திற்குத் தயாரா?
ஆனால் அவர் இதனைச் செய்ய மாட்டார். இது வரை மோடி ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பும் நடத்தியதில்லை. இவர் என்னோடு எதனை விவாதிக்க போகிறார்? மோடியின் நிலை என்ன? பாதுகாப்பில் இவரது திட்டமென்ன? ஏதாவது வளர்ச்சி பணிகள் குறித்து பேசுகிறாரா? நாட்டின் எதிர்கால திட்டம் குறித்து ஏதாவது மோடி சொல்லட்டும். ஒரு தனி மனிதன் இந்த நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானித்து விட முடியாது. அவர் அனைத்து கூட்டங்களிலும் பொய்யான தகவலையே தெரிவிக்கிறார்".

No comments:

Post a Comment