Wednesday, November 6, 2013

முத்துப்பேட்டையில் நேற்று 79 மில்லி மீட்டர் மழை!


 திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாகப் பரவலாக மழை பெய்துவருகிறது. புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக திங்கள்கிழமை இரவு விட்டுவிட்டு மழை பெய்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 5 மணியிலிருந்து சுமார் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை பலத்த மழை பெய்தது.






 முத்துப்பேட்டையில்  - 79, (மில்லி மீட்டரில்):பதிவானது இதனால், நகரில் மட்டுமின்றி வயல் பகுதிகளில் பள்ளங்களில் நீர் தேங்கியது. மாவட்டத்தில் சில இடங்களில் பாசன நீர் பற்றாக்குறையால் பயிர்கள் காயும் நிலை ஏற்பட்டது. தற்போது பெய்துவரும் மழை சம்பா பயிர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்):


 நன்னிலம் - 37.20, வலங்கைமான் - 35.20, பாண்டவையாறு தலைப்பு - 28.40, திருத்துறைப்பூண்டி - 27.4, மன்னார்குடி - 22, நீடாமங்கலம் - 20.20, திருவாரூர் - 11.80.
 நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் திங்கள்கிழமை பெய்யத் தொடங்கிய மழை, 2-வது நாளாக செவ்வாய்க்கிழமையும் பலத்த மழையாக நீடித்தது. சீர்காழியில் அதிகப்பட்சமாக 59.10 மி.மீ. மழை பதிவானது.


 மயிலாடுதுறை, கொள்ளிடம், மணல்மேடு, சீர்காழி ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமையைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமையும் மழை நீடித்தது. செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லிமீட்டரில்):
 சீர்காழி- 59.10, ஆணைக்காரன்சத்திரம் (கொள்ளிடம்)- 42. மணல்மேடு- 39.1, மயிலாடுதுறை- 25.4. நாகப்பட்டினம்- 16.6. திருப்பூண்டி- 12.2. வேதாரண்யம்- 9.2. தரங்கம்பாடி- 9. தலைஞாயிறு- 7.4.
 

No comments:

Post a Comment