Monday, November 4, 2013

முஸஃபர் நகரில் முஸ்லிம்களை படுகொலை செய்தது பி.ஏ.சி. படையினரா? – அரசு விசாரணை!

முஸஃபர் நகர் ஹுஸைன் பூரில் சில தினங்களுக்கு முன்னால் கொல்லப்பட்ட 3 முஸ்லிம் இளைஞர்கள் மீது பி.ஏ.சி. என அழைக்கப்படும் ப்ரொவின்ஷியல் ஆர்ம்ட் கன்ஸ்டாபுலரி (Provincial Armed Constabulary – PAC) என்ற பாதுகாப்புப் படையினர் சுட்டனரா என்பது குறித்து அரசு விசாரணை நடத்தி வருகிறது.



விசாரணை அறிக்கைக்காக காத்திருப்பதாக சிறப்புப் படை ஐ.ஜி. ஆஷிஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

ஜாட் இனத்தவர்களுடன் வந்த பி.ஏ.சி. படையினர் முஸ்லிம் இளைஞர்கள் மீது துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தனர் என்று ஹுஸைன்பூர் ஊர் மக்கள் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் இந்திர மணி திருபதிக்கும், ஏ.எஸ்.பி. அசோக் பிரியதர்சிக்கும் அளித்த புகாரைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஜாட்டுகளும், பி.ஏ.சி. படையினரும் தங்கள் மீது பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதாக ஹுஸைன்பூர் கிராம மக்கள் கூறுகின்றனர். ஒரு குடும்பத்தைச் சார்ந்த அம்ரோஸ் அலீ, மஹர்பான், அஜ்மல் ஆகியோர் இந்தக் கொடிய தாக்குதலில் கொல்லப்பட்டனர்.


பி.ஏ.சி.யின் வகுப்பு வெறியை குறித்து முஸ்லிம்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் முதலில் கலவரம் துவங்கியபோதே மாவட்டத்தின் பல இடங்களிலும் சி.ஆர்.பி.எஃபையும், ராணுவத்தையும் மாநில அரசு பாதுகாப்புக்காக நிறுத்தியது.

1970கள் முதல் பல்வேறு கலவரங்களில், வன்முறையாளர்களுடன் இணைந்து முஸ்லிம்களை கூட்டுக் கொலை செய்த வரலாறு பி.ஏ.சி.க்கு சொந்தம்.

1980-ஆம் ஆண்டு மொராதாபாத் கலவரத்தில் பி.ஏ.சி. முஸ்லிம்களுக்கு எதிராக கொள்ளையும், தீ வைப்பும் நடத்தியது. 1987-ஆம் ஆண்டு மே மாதம் அப்பாவிகளான  42 முஸ்லிம்களை உ.பி. மாநிலம் மீரட்டின் ஹாஷிம்புராவில் பி.ஏ.சி. கூட்டுப் படுகொலை செய்தது.

No comments:

Post a Comment