Tuesday, July 5, 2011

முத்துப்பேட்டையில் இனி புது சிம் கார்ட்கள் வாங்க முடியாது


முத்துப்பேட்டையில் செல் நிறுவனங்களினால் ஏற்ப்பட்ட பிரச்சனைகளினால் மொபைல் ரீசார்ச் செய்யும் கடைக்காரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இனி புது சிம் கார்ட்கள்ஆக்டிவேஷன் செய்ய கூடாது என முடிவு எடுத்துள்ளனர். அது மட்டுமல்லாது அவர்கள்“முத்துப்பேட்டை செல் ரீசார்ச் அசோசியேசன்” என்ற பெயரில் சங்கத்தை துவக்கி உள்ளனர். இதில்  தலைவராகS.பழனிதுரையும், செயலாளராக M.ஷேக் உதுமான், பொருளாளராக K.பாலாஜி, ஆலோசகராக M.முகம்மது ஷேக்தாவூத் மற்றும் B.அனந்த நாராயணன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.



கோரிக்கைகள்:
  • எந்த நிறுவனங்களின் ஆக்டிவேஷன் இலவசமாக செய்ய ஒத்துழைப்பு தரக்கூடாது.
  • அனைத்து செல் நிறுவனங்களும் விற்பனையார்களுக்கு வழங்கும் கமிஷனை 5% ஆக உயர்த்த வேண்டும்.
  • INCENTIVEஐ டிஸ்டிரிபியூட்டர் மூலம் வழங்காமல் நெட்வொர்க்கே நேரடியாக EC TOP UP மூலம் வழங்க வேண்டும்.
  • ஒரு சிம் கார்டிற்கு LIFE TIME என்று கால அவகாசம் உள்ளதால் குறைந்த பட்சம் ஒரு வருடத்திற்குள் அந்த என்னை RECYCLE செய்ய கூடாது 
  • மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் (VAS) என்ற பெயரில்  வாடிக்கையாளர்களிடமிருந்து பேலன்ஸ் தொகை எடுக்கப்படுவதை உடனே நிறுத்த வேண்டும்.
  • மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் (VAS) ஆக்டிவேட் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு தனியாக ரீசார்ச் தொகையை GPRS பேக் போல் அறிமுகப்படுத்த வேண்டும். பேலான்சில் இருந்து தொகையை பிடித்தம் செய்ய கூடாது.
  • வாடிக்கையாளர்களை டெலிமார்க்கெடிங் கால்கள் மற்றும் நெட்வொர்க்கின் விளம்பர கால்கள் மற்றும் SMS-களில் இருந்து பாதுகாக்க அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நெட்வொர்க்கே இலவசமாக DND  வசதியை ஆக்டிவேட் செய்து கொடுக்க வேண்டும்.
  • மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் (VAS) DEACTIVATE செய்ய வழிமுறைகளை எளிமையாக்கி, வழிமுறை விளக்க கையேடு அனைத்து ரீடைலர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். மேலும் புகார் எண் -198 ஐ தொடர்பு கொண்டு DEACTIVATE செய்ய வழி வகுக்க வேண்டும்.
  • வாடிக்கையாளர்கள் சேவை மையத்தை (புகார் எண் – 198) எளிதில் தொடர்பு கொள்ளுமாறு வழிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும்.
  • கஸ்டமருக்கு ஏற்ப்படும் பிரச்சனைகளுக்கு ரீடைலர்கள் பலி கடா ஆக்கப்படுவதை உடனே நிறுத்த வேண்டும்.

பொது மக்களின் நலன் கருதி அனைத்து கோரிக்கைகளை நிறைவேற்றினால் தான் நாங்கள் ஆக்டிவேஷன் செய்வோம் என “முத்துப்பேட்டை செல் ரீசார்ச் அசோசியேசன்” தலைவர் பழனிதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.
source:MPT FORCE

No comments:

Post a Comment