Saturday, July 9, 2011

இலங்கை இறுதிகட்ட யுத்தம்! பேராசிரியர் நியூமன் அறிக்கை!

வன்னியில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தில் ஒரு லட்சம் வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளமை ஐ.நா. அறிக்கை மற்றும் சர்வதேச செஞ்சிலுவைக் குழு ஆகியன வெளியிட்ட அறிக்கைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக இந்திய பேராசிரியர் போல் நியூமன் தெரிவித்துள்ளார்.



ரைம்ஸ் ஒப் இந்தியா என்ற ஊடகத்திற்கு வழங்கிய தகவல் ஒன்றில் இந்தியாவின் பெங்களூர் பல்கலைக்கழகத்தின் அரசறிவியற்துறைப் பேராசிரியர் போல் நியூமன் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார். 


வன்னிப் போரின்போது இலங்கை இராணுவத்தினரால் அறிவிக்கப் பட்டிருந்த மோதல் தவிர்ப்பு வலயத்திலிருந்து காயமடைந்த சுமார் பதினான்காயிரம் பேரை தாம் அரச பகுதிக்கு சிகிச்சைக்காக வெளியேற்றியிருந்ததாக சர்வதேச செஞ்சிலுவைக் குழு கணிப்பிட்டிருந்தது. 

இப்போரில் சுமார் ஐயாயிரம் பேர் வரை தமது உடலுறுப்புக்களை இழந்திருந்தனர். 2008ம் ஆண்டில் சுமார் எழுபதாயிரம் மக்கள் கொல்லப்பட்டதாகவும் அது மேலும் குறிப்பிட்டுள்ளதை போல் நியூமன் சுட்டிக் காட்டியுள்ளார்.  அத்துடன் இலங்கை இராணுவத்தினரால் மருத்துவமனைகள், பாடசாலைகள் மற்றும் பொதுக் கட்டிடங்கள் என்பன மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தமிழீழ விடுதலைப்புலிகள் இறுதி நேரத்தில் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினர் என்றும் அவ் அறிக்கைகள் மூலம் தெரிய வந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment