Tuesday, July 12, 2011

துருக்கி தனது இஸ்ரேல் மீதான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது

 துருக்கியில் மூன்றாவது தடவையாக பெரும்பான்மை பலத்துடன் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள துருக்கி பிரதமர் ரஜப் தயூப்அர்துகான் இஸ்ரேலுடன் சுமூக உறவை ஏற்படுத்துவதை நிராகரித்துள்ளார். கடந்த ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை காஸாவுக்கு உதவி நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் தொடரணி மீது தாக்குதல் நடத்தியதில் 9 துருக்கிய மனித நேய செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கு இஸ்ரேல் மன்னிப்பு கோரவேண்டும், காஸா மீதான முற்றுகையை நீக்கவேண்டும். இவைகள் இடம்பெற்றால் இஸ்ரேலுடன் சுமூக உறவு மீண்டும் ஏற்படுத்தப்படும் என்றும் இதில் காஸா மீதான முற்றுகையை இஸ்ரேல நீக்குவது முக்கிய நிபந்தனை என்றும் துருக்கி பிரதமர் அர்துகான் பாராளுமன்றத்தில் இஸ்ரேல்  தொடர்பான துருக்கியின் நிலைப்பாட்டை மீண்டும்  உறுதிப்படுத்தியுள்ளார். விரிவாக

காஸாவுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் தொடரணி மீது தாக்குதல் நடத்தியதில் 9 துருக்கிய மனித நேய செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து துருக்கிய பாராளுமன்றம் இஸ்ரேலுடனான அனைத்து இராணுவ மற்றும் பொருளாதார உறவுகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற  ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
துருக்கியை ஆளும் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இஸ்ரேல் மீது துருக்கி மேலும் கடுமையான நடவடிக்கைகளை மேற் கொள்ள கோரினர். துருக்கிக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் 16 வகையான இராணுவ ஒப்ந்தங்கள் நடைமுறையில் இருந்தன . இந்த ஒப்பந்தங்களை உறைநிலையில் வைக்க வேண்டும் என்று அன்று துருக்கி தீர்மானித்தது.
இதை தொடர்ந்து துருக்கி இஸ்ரேல் இந்த தனது இராணுவ தாக்குதல் தொடர்பாக சர்வதேச சுயாதீனமான விசாரணை நடத்த வேண்டும் என்றும். இஸ்ரேல் தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும், கொல்லப்பட்ட மனிதாபிமான செயற்பாட்டாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். காஸா மீதான முற்றுகையை நீக்கவேண்டும். என்று துருக்கி கோரியது.
ஆனால் இவற்றை இஸ்ரேல ஆக்கிரமிப்பு அரசு புறகணித்து வந்தது . இதை தொடர்ந்து துருக்கிய பிரதமர் தலைமையில் கூடிய துருக்கி உயர் பாதுகாப்பு சபை இஸ்ரேலுடன் உள்ள அனைத்து இராணுவ உறவுகள் , உடன்படிக்கைகள் என்பன வற்றை முழுமையாக துண்டிக்கும் முகமாக பல படித்தரங்களை கொண்ட ரோட் மெப் ஒன்றை தயாரித்தது .

இந்த ரோட் மெப் துருக்கிகும் இஸ்ரேலுக்கும் இடையில் உள்ள 16 வகையான இராணுவ ஒப்பந்தங்களையும் முழுமையாக துண்டிகும் – ‘தாங்கிகள் , யுத்த விமானங்கள் நவீனமாக்கள்’ என்ற 757 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான ஒபந்தம். $757 million plane and tank modernization project மற்றும் 1.5 பில்லியன் பெறுமதியான ஏவுகணை ஒபந்தம். missile project worth over $1.5 billion- என்பனவும் அடங்கும் முதல் கட்டத்தில் இஸ்ரேல் நடாத்திய கொலைகளை உடனடியாக சர்வதேச சுயாதீனமான விசாரணை நடத்த அனுமதித்து சர்வதேச விசாரணை அதிகாரிகள் இஸ்ரேல் வர அனுமதிக்க வேண்டும். என்று நிபந்தனையிட்டது.
இதை இஸ்ரேல் புறகணித்தாள் துருக்கி திருபிப்பியலைத்த தனது தூதுவரை மீண்டும் இஸ்ரலுக்கு அனுப்பாது. என்று அந்த ரோட் மெப் தொடங்கி இறுதியில் இஸ்ரேலுடன் அனைத்து இராணுவ உறவுகளையும் துண்டிக்க ஏதுவாக அமைந்திருந்தது .
கடந்த ஆண்டில் துருக்கிய ஜனாதிபதி அப்துல்லாஹ் குல், லி-மொன்டே எனும் பிரான்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ப்ரீடம் புளோடில்லா மீதான இஸ்ரேலியத் தாக்குதலானது, பயங்கரவாத அமைப்புக்கள் மேற்கொள்ளும் குற்றச்செயலை ஒத்திருக்கிறது. என்றும் இஸ்ரேல் மேற்கொண்ட அத்துமீறல் நடவடிக்கைக்காக மன்னிப்புக் கோரல், இழப்பீடு வழங்குதல், சுயாதீனமான விசாரணையொன்றை ஒழுங்குசெய்தல், காஸா மீதான முற்றுகையை நீக்குதல் முதலான நடவடிக்கைகள் தொடர்பில் உரிய முன்னெடுப்புக்களை இஸ்ரேல் மேற்கொள்ளாத வரையில் அதன் அடாவடிச் செயற்பாட்டை இலகுவாக மறக்கவோ மன்னிக்கவோ போவதில்லை. என்று அவர் தெரிவித்திருந்தார்.
தற்போது இஸ்ரேல் ஒரு விசாரணை ஒன்றை மேற்கொண்டு வருகின்றது. அந்த விசாரணையை பெரும்பாலானவர்கள் வெறும் கண்துடைப்பாகத்தான் பார்க்கின்றனர். என்பது குறிபிடத்தக்கது .
இதேவேளை துருக்கி பிரதமரின் இஸ்ரேல் தொடர்பான மீண்டும் உறுதிப்படுத்தப்பட்ட நிலைப்பாடு தொடர்பாக தனது அதிர்ப்தியை வெளிப்படுத்தியுள்ள இஸ்ரேல் யுத்த அமைச்சர். விரைவில் வெளிவரும் அறிக்கை காஸா மீதான முற்றுகை சட்டபூர்வமானது என்பதையும், கப்பல்கள் மீதான இஸ்ரேலின் நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களுக்கு அமைவானது என்பதையும் உறுதிப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment