Friday, July 1, 2011

சியோனிச தாளத்துக்கு ஆட்டம் போடும் பிரிட்டன்


ஷேய்க் ரியத் சலாஹ் -Sheikh Raed Salah- என்ற ’1948 ஆம் ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனின் இஸ்லாமிய இயக்கம்’ என்ற அமைப்பின் தலைவரை பிரிட்டன் கைது செய்துள்ளது. இந்த கைதையும் நுழைவு மறுப்பையும்  சியோனிச சக்திகளில் தாளத்துக்கு பிரிட்டன் ஆட்டம் போடுகின்றது என்று இஸ்ரேலிய அரபு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பிரிட்டனில் உள்ள பாலஸ்தீன மக்களின் தோழமை அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்த நிகழ்வு ஒன்றில் ‘ஜெருசலத்தில் சமாதானத்தையும் நீதியையும் கட்டி எழுப்புதல்’ -”Building Peace and Justice in Jerusalem”- என்ற தலைப்பில் உரையாற்ற விருந்த ஷேய்க் ரியத் சலாஹ் பிரிட்டன் விசா பெற்று அங்கு சென்றவேளை பிரிட்டன் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் நாட்டுக்குள் நுழைய விடாது தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இஸ்ரேலுக்கு கடத்தப்படவும் உள்ளார் பிரிட்னின் இந்த செயலை பல பொது அமைப்புகள் கண்டித்துள்ளது விரிவாக

1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமித்த பலஸ்தீன் தேசம் தற்போது இஸ்ரேல் என்ற சட்டவிரோத நாடாகவுள்ளது என்ற முழக்கத்தை இஸ்ரேலுக்குள் இருந்து முழங்கி பலஸ்தீன விடுதலைக்காக சாத்வீக முறையில் போரடிவருபவர். இவரை இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அரசு பல தடவைகள் பல குற்றசாட்டுகளை சுமத்தி கைது செய்து சிறைபடுதியுள்ளது இஸ்ரேலுக்குள் இருந்தே இஸ்ரேலுக்கு எதிராக போராடுபவர் இவரின் அமைப்பும் தடைசெய்யப்பட்டுள்ளது.
இவரை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசு கைதுசெய்து சிறையில் தள்ளும் போது பல மாதங்கள் பல ஆண்டுகள் என்று வதை முகாம்களில் இருந்த பின்னர் இவர் வெளிவரும் ஒவ்வொரு சந்தர்பத்திலும் எமது போராட்டம் ஓயாது இஸ்ரேலின் எந்த விதமான அடக்குமுறைக்கும் அடிபணியோம் பயமின்றி எமது போராட்டம் தொடரும் எமது போராட்டத்தின் முடிவில் பாலஸ்தீன் விடுதலை பெரும் அல் அக்சா மீட்கப்படும் என்றும் தெரிவிப்பார். இவ்வாறான மிகவும் பலமான மனஉறுதி மிக்க ஒரு சாத்வீக போராளி இவர் என்று பலஸ்தீன தகவல்கள் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment